தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Arani Sri Adhikesava Swami Temple

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில்!

Aug 15, 2022, 07:01 PM IST

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அமைந்துள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.

சமீபத்திய புகைப்படம்

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM

சனி கஷ்டப்படுத்த போகிறார்.. வக்ரத்தில் சிக்கிய 3 ராசிகள்.. 5 மாதம் விடமாட்டார்.. கும்பத்தில் சம்பவம்

May 02, 2024 02:17 PM

Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

May 02, 2024 01:40 PM

Transit of Venus : சுக்கிரன் பெயர்ச்சி.. பலன்களை அள்ளப்போகும் மூன்று ராசிகள்.. பதவி உயர்வு.. சம்பள உயர்வு கிடைக்கும்!

May 02, 2024 12:19 PM

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM

குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

May 02, 2024 10:20 AM

இக்கோயிலில் மூலவராகவும் உற்சவராகவும் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் காட்சி தருகின்றார். அம்பாளாக ஆதிலட்சுமி தாயார் உள்ளார்.

இக்கோயிலின் தலமரமாக எலுமிச்சை மரம் அமைந்துள்ளது. லட்சுமி, ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர், சிவன், பிரம்மன், நாகராஜன், கணேசன், ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், திருக்கச்சி நம்பி உள்ளிட்ட சாமி சிலைகள் அமைந்துள்ளன.

இக்கோயில் முக்கிய நாட்களாக வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி பிரமோட்சவம் விழா, நவராத்திரி பவித்திர உற்சவம் ,வனபோஜனம், மார்கழி ஏகாதசி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

இக்கோயிலில் உள்ள பெருமாளை ஒன்பது வாரம் புதன்கிழமை தோறும் தொடர்ந்து அர்ச்சனை செய்து பச்சை பட்டு உடுத்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது. 

மேலும் இங்குள்ள அம்பாளையும் பெருமானையும் வேண்டுபவர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.