தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கையை விரித்து வைக்க வேண்டிய ராசிகள்.. பணத்தை தாறுமாறாக கொட்டும் சுக்கிரன்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?

கையை விரித்து வைக்க வேண்டிய ராசிகள்.. பணத்தை தாறுமாறாக கொட்டும் சுக்கிரன்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?

Oct 29, 2024, 03:40 PM IST

google News
Lord Venus: சுக்கிரனின் அனுஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Venus: சுக்கிரனின் அனுஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: சுக்கிரனின் அனுஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். 

சமீபத்திய புகைப்படம்

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றி உள்ளார்.

இந்நிலையில் சுக்கிரன் அக்டோபர் 16ஆம் தேதி அன்று விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்கு தனது இடத்தை மாற்றினார். சுக்கிரனின் அனுஷம் நட்சத்திர பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 

புதிய முதலீடுகளில் உங்களுக்கு எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்ட ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் எடுத்துக்கொண்ட இலக்குகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெற்று தரும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முழுகவனத்தை செலுத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகள் செய்ய புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும். 

நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை