'குரு பார்வை, சுக்கிரனின் பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் சிறப்பா சேர்ந்த மாசம்'-இந்த ராசிக்கு எல்லாமே டாப் தான்-guru venus strength mercury transit are all excellent in october month everything is good for this sign - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  'குரு பார்வை, சுக்கிரனின் பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் சிறப்பா சேர்ந்த மாசம்'-இந்த ராசிக்கு எல்லாமே டாப் தான்

'குரு பார்வை, சுக்கிரனின் பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் சிறப்பா சேர்ந்த மாசம்'-இந்த ராசிக்கு எல்லாமே டாப் தான்

Manigandan K T HT Tamil
Sep 22, 2024 09:28 AM IST

October Month Rasi Palan: உங்க வொர்க் லைஃப்பும் கொஞ்சம் நல்லா போகும். உங்களை பிளான் பண்ணும்படி உங்க லைஃப் வந்து கொண்டு போகும். நிதி ரீதியாகவும் ரொம்ப நல்லா இருக்கும். கன்னி ராசிக்கு அக்டோபர் மாதம் சிறப்பாகவே இருக்கிறது.

'குரு பார்வை, சுக்கிரனின் பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் சிறப்பா சேர்ந்த மாசம்'-இந்த ராசிக்கு எல்லாமே டாப் தான்
'குரு பார்வை, சுக்கிரனின் பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் சிறப்பா சேர்ந்த மாசம்'-இந்த ராசிக்கு எல்லாமே டாப் தான்

உங்க வொர்க் லைஃப்பும் கொஞ்சம் நல்லா போகும். உங்களை பிளான் பண்ணும்படி உங்க லைஃப் வந்து கொண்டு போகும். நிதி ரீதியாகவும் ரொம்ப நல்லா இருக்கும். அதனால வொர்க் லைஃப் மற்றும் பைனான்சியல் கண்டிஷன் எல்லாமே ரொம்ப ரொம்ப பாசிட்டிவா இருக்கும்.

இரண்டில் சுக்கிரன்

இரண்டில் சுக்கிரன் குடும்பத்துல உள்ள குழப்பங்கள் எல்லாம் மறைந்து ஒரு அமைதியும் ஒரு ஆரோக்கியமான உறவா கன்வெர்ட் ஆகுற யோகத்தை அதுக்கு கொடுக்குது திருமணம் வரைக்கும் கொண்டு போயிடலாம்.

ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்கன்னா ஒரு சாய்ஸை தீர்க்கமாக எடுக்க முடியும். திருமணம் வரைக்கும் இட்டுச் செல்ல முடியும். ஒரு மேரேஜ் முடிச்சிடலாம்னு நினைச்சீங்கன்னா அது கண்டிப்பா உண்டு. வரன் பார்க்கிறவங்களுக்கும் வரன் கிடைக்கிற வாய்ப்பு உண்டு.

நல்ல படித்த நல்ல குணமான நல்ல திறமையான நல்ல அழகான அறிவான ஒரு வரன் வாழ்க்கை துணையா உங்களுக்கு கிடைக்கிறதுக்கு வாய்ப்புகள் நல்லாவே இருக்கு.

அன்பு, பாசம் நெருக்கம் இதுக்கும் ஒரு நல்ல மாதமாக அக்டோபர் இருக்கும்.

மனசு சந்தோஷம்தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. அந்த மனம் கொஞ்சம் சந்தோஷப்படுற மாதிரி ஏதோ ஒரு உறவு உங்களை நல்லா பார்த்துக்குவாங்க.

ஸ்டுடென்ட்ஸை பொறுத்தவரைக்கும் கன்னி இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும்.

புதன் பெயர்ச்சி

குரு பார்வை, சுக்கிரனுடைய பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் ரொம்ப சிறப்பா சேர்ந்த மாதம் இது. உங்க மைண்டே வந்து ரொம்ப பாசிட்டிவா யோசிக்க ஆரம்பிச்சுரும். நம்பிக்கை தானாவே வந்துவிடும்.

ஜுவல்ஸ் வாங்கணும்னு நினைக்கிறீங்க, சுபகாரியம் பண்ணனும்னு நினைக்கிறீங்க, மகன் மகளுக்கு பாகப்பிரிவினை செஞ்சு கொடுக்கணும்னு நினைக்கிறீங்க, நீங்க ஏதாவது பயணம் பண்ணனும்னு ஆசைப்படுறீங்க இதையெல்லாம் அக்டோபரில் செய்யலாம். கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் அக்டோபர் மாதம் நிறைய விஷயங்களில் நல்ல பாசிட்டாவாகவே இருக்கிறது.

என்னென்ன விஷயங்களை நீங்க யோசிக்கிறீங்களோ அதை வந்து நல்லபடியா எக்ஸிகியூட் பண்றதுக்கு ஒரு சரியான மாதமா இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

இது ஒரு பொது பலன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும், அதுக்குள்ள நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும்.

இதெல்லாம் அடிப்படையாக வெச்சிதான் ஒரு மனிதனுடைய பலன்கள் என்ன நடக்கும்னா சரியா புரிஞ்சுக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்