தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 : புரோமோசன்.. வெளிநாடு செல்லும் வாய்ப்பு.. சம்பள உயர்வு.. இது எல்லாம் இந்த ராசிகளுக்கு தான்!

Guru Peyarchi 2024 : புரோமோசன்.. வெளிநாடு செல்லும் வாய்ப்பு.. சம்பள உயர்வு.. இது எல்லாம் இந்த ராசிகளுக்கு தான்!

Divya Sekar HT Tamil

Mar 16, 2024, 11:21 AM IST

google News
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியால் சில ராசிகள் பலன் அடையும். அந்த வகையில் தொழில் சார்ந்து எந்த ராசிக்கு குரு இந்த முறை உதவ போகிறார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியால் சில ராசிகள் பலன் அடையும். அந்த வகையில் தொழில் சார்ந்து எந்த ராசிக்கு குரு இந்த முறை உதவ போகிறார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியால் சில ராசிகள் பலன் அடையும். அந்த வகையில் தொழில் சார்ந்து எந்த ராசிக்கு குரு இந்த முறை உதவ போகிறார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

குருபகவான் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை அள்ளி கொடுக்கக் கூடியவராக உள்ளார்.நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் செல்வம்,செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.அதனால் இவர் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் இடமாற்றத்தால் கட்டாயம் தாக்கம் இருக்கும். சிலருக்கு நல்ல விதமாக இருக்கும். சிலருக்கு கெட்ட விதமாக இருக்கும். நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடியவர் இவர். குருபகவான் மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். வரும் மே 1ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசியில் குருபகவான் பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிகள் பலன் அடையும். அந்த வகையில் தொழில் சார்ந்து எந்த ராசிக்கு குரு இந்தமுறை உதவ போகிறார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த முறை மேஷ ராசிக்கு நல்ல பலன்களை குரு அள்ளி கொடுக்கப் போகிறார் புரமோஷனுக்காக காத்திருக்கும் மேஷ ராசிகளுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். குறிப்பாக கட்டிடத் தொழில் மற்றும் மருத்துவம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு இந்த முறை நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது.

கடகம்

அதேபோல கடக ராசிக்கும் இந்த முறை குரு நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார். தொழில் சார்ந்து நல்ல நிலைமையிலும் நல்ல வேலை நல்ல துறையில் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த முறை கடக ராசிக்கு குரு தொழில் சார்ந்து நன்கு உதவுவார். அதேபோல வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும். கடக ராசிக்கு கண்டிப்பாக நல்ல செய்தி வரும் இவ்வளவு நாளாக எத்தனை முறை முயற்சி செய்தும் கிடைக்காமல் இருந்த வெளிநாட்டு வாய்ப்பு தற்போது கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம் பொருத்தவரை நிலைமை மோசமாகாது.. வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி வரும். செலவு வரவு சமமாக இருக்கும். குரு உங்களுக்கு வெளிநாடு செல்ல மட்டும் பலன்களை அள்ளித் தருகிறார். மற்றபடி மிதுன ராசிக்கு எந்த பலனும் குரு இந்த முறை அளிக்கவில்லை.

சிம்மம்

சிம்மம் பொருத்தவரை தொழிற் சார்ந்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் தான். ஏனெனில் பத்தில் குரு இருக்கிறார் எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி

வேலையை பொறுத்தவரை கன்னி ராசிக்கு இருக்கிற இடத்தில் இருந்து எங்கும் மாற வேண்டாம். அப்படி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மாறலாம். ஏனெனில் உங்களை குரு வளர்ச்சியை நோக்கி கூட்டி செல்கிறார். அதனால் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

துலாம்

துலாம் ராசி பொருத்தவரை தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நபர்களுக்கு நல்ல பலன்களை இந்த முறை குரு கொடுக்க உள்ளார்.

விருச்சிகம்

விருச்சிக ராசி பொருத்தவரை நீங்கள் தொட்டது தொடங்கும் என்றே சொல்லலாம். நீங்கள் தொழில் அல்லது வேலை தேடி அலைகிறீர்கள் என்றால் உங்களுக்கு அது நிச்சயம் வெற்றி பெறும் துலாமுக்கு குரு இந்த முறை நல்ல பலன்களை கொடுக்கிறார்.

மகரம்

ஐந்தாம் இடத்தில் குரு உள்ளதால் மகர ராசிக்கு இந்த முறை நல்ல பலன்கள் தான் கிடைக்கப் போகிறது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேண்டியதை குரு அள்ளிக் கொடுப்பார். வேலை தேடி கொண்டிருக்கும் மகர ராசிக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். அந்த அளவிற்கு குரு உங்களுக்கு உதவி செய்வார் ‌.

நன்றி : Life Horoscope

அடுத்த செய்தி