தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ‘வேட்டைக்காரன் கோயில் திருவிழா‘ – ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

‘வேட்டைக்காரன் கோயில் திருவிழா‘ – ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

Priyadarshini R HT Tamil

Mar 28, 2023, 12:25 PM IST

Temple Festival : நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது.
Temple Festival : நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது.

Temple Festival : நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவையொட்டி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

சமீபத்திய புகைப்படம்

பண முட்டையை அவிழ்த்து விட்டார் சுக்கிரன்.. சுத்தி சுத்தி அடி வாங்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் மிதப்பது உறுதி

May 04, 2024 11:23 AM

குபேரனுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்.. எப்போதும் உங்களை விடாமல் பணத்தில் குளிக்க வைப்பார்.. அதிர்ஷ்ட ராசிகள்

May 04, 2024 10:03 AM

Love Horoscope : உங்கள் காதலியை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.. கவனமாக இருங்கள்!

May 04, 2024 09:55 AM

Venus Transit : ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு செல்வம் பெருகும்.. தொட்டது துலங்கும்!

May 04, 2024 09:34 AM

செவ்வாய் மீனத்தில் முரட்டு அடி.. சிக்கி கொண்ட ராசிகள்.. புரட்டி எடுக்க போவது உறுதி

May 04, 2024 06:45 AM

Today Horoscope : 'பதற்றம் நீடிக்குமா.. நிம்மதி நிரந்தரமா' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

May 04, 2024 04:30 AM

விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி நேற்று இரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்தில் அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.

இன்று நடந்த கறி விருந்தில் புண்ணபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் இருபாலரும் தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார். சில கோயில்களில் மட்டும் ஆண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். அதுபோன்ற கோயில்களுள் இந்தக்கோயிலும் ஒன்று.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்