தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Amsa Avathara Yogam: மேஷம் முதல் மகரம் வரை! அரசன் ஆக ஆட்சி ஆள வைக்கும் அம்ச அவதார யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Amsa Avathara Yogam: மேஷம் முதல் மகரம் வரை! அரசன் ஆக ஆட்சி ஆள வைக்கும் அம்ச அவதார யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil

Aug 01, 2024, 05:45 AM IST

google News
Amsa Avathara Yogam: அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும்.
Amsa Avathara Yogam: அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும்.

Amsa Avathara Yogam: அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும்.

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. சூரிய பகவான் மூலம் கிடைக்கும் யோகங்களில் முதன்மையான யோகங்களில் ஒன்றாக அம்ச அவதார யோகம் விளங்குகின்றது. 

சமீபத்திய புகைப்படம்

சனி புரட்டி எடுக்க போகிறார்.. நவம்பர் முதல் பணத்தை மூட்டை கட்டும் ராசிகள்.. இனி உங்களுக்கு யோகம் உச்சம் தான்!

Nov 29, 2024 10:56 AM

குரு மறுக்க மாட்டார்.. அருள் மழையில் நீச்சல் அடிக்கும் ராசிகள்.. பணம் தலைக்கு மேலே கொட்டப் போகுது

Nov 29, 2024 10:02 AM

சனி தொட்டால் விடமாட்டார்.. இந்த 3 ராசிகள்.. தொட்டுப் பார்க்க நினைக்காதீங்க.. ராஜயோகம் வருகுது

Nov 29, 2024 09:58 AM

மேஷம், துலாம், கும்பம் ராசியினரே நல்ல நேரம் ஆரம்பம்.. வெற்றி தேடி வரும்.. ரோகிணி நட்சத்திரத்தில் குரு சஞ்சார பலன்கள் இதோ

Nov 29, 2024 08:42 AM

இந்த ராசி வாழ்க்கை மாறப்போகிறது.. குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்!

Nov 29, 2024 08:22 AM

புத்தாண்டில் சொல்லியடிக்கும் கஜலட்சுமி ராஜயோகம்.. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், கும்பம் ராசியினரே ஜாக்பாட்தா!

Nov 29, 2024 08:14 AM

அம்ச அவதார யோகம் 

அம்ச அவதார யோகத்தை பெற ஒருவர் சர லக்னங்கள் என்று சொல்லப்பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ஏதேனும் ஒரு லக்னங்களில் பிறந்திருக்க வேண்டும். இரண்டாவதாக சனி பகவான் உச்சம் பெற்று இருக்க வேண்டும் என்பது இதன் விதி ஆகும். 

மூன்றாவதாக குரு பகவானும், சுக்கிர பகவானும் தங்களுக்குள் கேந்திரங்களிலோ, அல்லது லக்ன கேந்திரங்களிலோ அமர வேண்டும். 

எப்படி இருந்தால் யோகம்? 

உதாரணமாக, ஒரு மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இதில் சனி உச்சம் பெற்று உள்ளது. சர லக்னத்தில் பிறக்க ஒரு அமைப்பு இருக்கும். சனி பகவான் இரண்டை ஆண்டுகளுக்கு மேலாக துலாமில் உச்சம் பெற்று இருபார். குருவும், சுக்கிரனும் கேந்திரத்தில் அமர வேண்டும். இப்படி இருந்தால் இந்த அம்ச அவதார யோகம் உண்டாகும். இந்த விதிகள் கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்களுக்கும் பொருந்தும். 

கடக லக்னத்திற்கு சனி உச்சம் பெற்று, லக்னத்திற்கு 2ஆம் இடத்தில் சுக்கிரன், அவருக்கு 4, 7, 10 இல் குரு இருந்தாலும் இந்த அம்ச அவதார யோகம் வேலை செய்யும். 

அம்ச அவதார யோகத்தின் பலன்கள் 

அம்ச அவதார யோகம் கொண்டவர்களுக்கு பிறப்பே அற்புதமாக அமையும். பிறந்தது முதலே வளர்ச்சி, முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அரச போக வாழ்கையை தரும். குடும்பத்தில் செல்வ செழிப்பு, பொருளாதர வசதிகள், அதிகாரம் மிக்க பதவிகளை அடைவது, அதிகாரம் மிக்கவர்கள் உடன் தொடர்பு, அரசனுக்கு நிகரான வாழ்கையை பெறுவது உள்ளிட்ட நற்பலன்களை இது ஏற்படுத்தும். 

கல்வி, தொழில், உத்யோகத்தில் தனி சிறப்பு மிக்க நபர்களாக இந்த யோகம் பெற்றவர்கள் விளங்குவார்கள். 

கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய அமைப்பு இந்த யோகத்திற்கு உண்டு. தான் சார்ந்த இனத்தின் தலைமை பொறுப்புக்கு வருவதற்கான தகுதிகள் இந்த அம்ச அவதார யோகத்திற்கு உண்டு. 

இருப்பினும், 48 வயது இவர்களுக்கு நிரம்பும் போது மிகப்பெரிய மரண கண்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம். அதனை அவர்கள் கடந்துவிட்டால் பூரண ஆயுள் கிடைக்கும் என்பது இதன் ஜோதிட விதியாக உள்ளது. 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி