Kethara Yogam: மேஷம் முதல் மீனம் வரை! பலதொழில் செய்து டான் ஆக்கும் கேதார யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!
Kethara Yogam: இந்த யோகம் அமைந்தவர்கள் பொதுவாக பல்துறைத் திறமை உடையவர்களாகவும், தங்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என நம்பப்படுகிறது.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் உண்டாகும் ஒரு யோகங்களில் ஒன்றாக கேதார யோகம் குறிப்பிடப்படுகின்றது.
கேதார யோகம்
கேதார யோகம் என்பது ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் மிகவும் அரிதான மற்றும் சிறப்பான ஒரு யோகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த யோகம் அமைந்தவர்கள் பொதுவாக பல்துறைத் திறமை உடையவர்களாகவும், தங்கள் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என நம்பப்படுகிறது.
4 வீடுகளில் 7 கிரக சேர்க்கை
கேதார யோகத்தை பொறுத்தவரை இதில் ராகு, கேதுக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. சப்த கிரகங்கள் எனப்படும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஏதேனும் 5 வீடுகளுக்குள் மட்டும் அடக்கி இருந்து ஏதேனும் 2 கேந்திரகளுக்குள் தொடர்பு ஏற்பட்டால் கேதார யோகம் உண்டாகின்றது.
உதாரணமாக சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் மேஷத்திலும், சனி, குரு ஆகியோர் கடகத்திலும், செவ்வாய் துலாத்திலும், சந்திரன் மகரத்திலும் இருந்தால் கேதார யோகம் உண்டாகும். இதில் கிரகங்கள், ஆட்சி, உச்சம், நட்பு, பகை பெற்று இருப்பதை இதில் கணக்கில் கொள்ளக்கூடாது. ஆட்சி, உச்சம் பெற்றால் அது கூடுதல் வலிமையை தரும்.
சிம்மத்தில் சூரியன், சுக்கிரன், புதன், விருச்சிகத்தில் குரு, செவ்வாய், தனுசு ராசியில் சனி பகவான், சந்திரன் உள்ளார் எனில் இது கேதார யோகத்தில் வராது. 4 வீடுகளில் 7 சப்த கிரகங்கள் இருக்க வேண்டும். 2 கேந்திரங்கள் உடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
கேதார யோக பலன்கள்
கேதார யோகம் அமைய பெற்றவர்கள் பல தொழில் செய்து வெற்றி வாய்ப்பை ஈட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். பல தொழில்கள் செய்வதன் மூலம் உண்டாகும் செல்வமும், புகழும் இவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தி தரும். அதில் வெற்றி வாய்ப்புகளை பெறுவார்கள். பெரும் நிலங்களை கொண்டு விவசாயம் செய்பவர்களாக இவர்கள் விளங்குவார்கள். அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் உடன் தொடர்பு இவர்களுக்கு ஏற்படும்.
7 கிரகங்கள் 4 வீடுகளில் உள்ளதில் ஏதேனும் கிரகங்கள் வலுப்பெற்றால் கூடுதல் சிறப்பு உண்டாகும். கேதார யோகம் பெற்றவன் வாழ்வில் தோற்கமாட்டான் என்பது வாழ்வின் சூழ்சுமம் ஆன விதியாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.