Puducherry : யூடியூப் விளம்பரம் பார்த்து உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு.. தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை!
Puducherry : புதுச்சேரி இளைஞருக்கு உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய தொடங்கிய 15 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள, புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 26 வயது இளைஞர், சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு, ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்தியால்பேட்டை டிவி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன்.இந்திய கம்யூ பிரமுகர்.அரசின் மார்க்கெட்டி கமிட்டி ஊழியர். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு வயது 26.இதில் ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.
இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.ஹேமச்சந்திரன் உடல் எடை அதிகமாக இருப்பதால் தனது உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வந்துள்ளார். உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விரும்பிய ஹேமச்சந்திரன் பல்வேறு இடங்களில் உடல் எடையை குறைக்க வழி தேடி வந்துள்ளார். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தகவல் அறிந்து கதறி துடித்த ஹேமச்சந்திரன் பெற்றோர் சென்னை பம்மல் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர்.
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக. மகனை பறிகொடுத்த ஹேமச்சந்திரன் தந்தை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
ஹேமச்சந்திரன் தந்தை கூறும் போது ”உடல் பருமன் காரணமாக எனது மகன் யூட்யூபில் நிறைய வீடியோக்களை பார்த்து வந்தார். அப்பொழுது youtube-ல் விளம்பரம் வந்தது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அடிக்கடி உடல் எடை குறைப்பது சம்பந்தமாக வீடியோ போடுவார். உடல் எடையை குடல் அறுவை சிகிச்சை செய்வது போல் செய்து ஆறு மாதத்தில் 60 கிலோ அல்லது 50 கிலோ குறைத்து விடலாம் என அந்த வீடியோவில் மருத்துவர் விளம்பரம் செய்தார்.
அது மட்டும் இல்லாமல் அந்த அறுவை சிகிச்சைக்கு தான் கேரண்டி எனவும் அவர் அந்த விளம்பரத்தில் கூறியிருப்பார். இந்த விளம்பரத்தை பார்த்து என்னுடைய பையன் அங்கே சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறினார். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. என் பையன் கேட்டதால் குடும்பத்துடன் நாங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசித்தோம். அவர்கள் இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை சிம்பிளான ஆபரேஷன் தான் என்றார். பிறகு பம்மலில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் இதற்கு இத்தனை லட்சம் செலவாகும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் யோசித்து பிறகு சொல்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன்
ஆனால் வாட்சப்பில் என் பையனிடம் அவர்கள் பேசி வந்துள்ளன. பிறகு என் பையன் அடிக்கடி என்னை வற்புறுத்தியதால் நான் அந்த சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன். மருத்துவமனையில் செக் அப் அனைத்தும் முடிந்தது.ஆனால் இந்த ஆபரேஷனுக்கு பெரிய மருத்துவர் எவரும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஆனால் அதற்குள் பம்மலில் உள்ள மருத்துவர் ஆபரேஷனுக்கு தேதி குறித்தார். மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு சேர்ந்த சில நிமிடங்களில் எனது பையன் இறந்து போனான். இந்த மருத்துவர் மீது முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.
