தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kamal Haasan: ’கேவலமாக உள்ளது’ எண்ணூர் கடற்கரைக்கு சென்ற கமல் பரபரப்பு பேட்டி!

Kamal Haasan: ’கேவலமாக உள்ளது’ எண்ணூர் கடற்கரைக்கு சென்ற கமல் பரபரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Dec 17, 2023 10:01 AM IST

”எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல்”

எண்ணூர் கடற்கரையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
எண்ணூர் கடற்கரையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு நான் வருவது முதல் தடவை அல்ல; பலமுறை இங்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இது சுத்தமாகும் என நம்பிக்கொண்டுதான் செல்கிறேன். 7 ஆண்டுகளில் இது இன்னும் மோசமாகத்தான் ஆகி உள்ளது. எண்ணெய் பிளாஸ்டிக் விரித்தது போல் நதிக்கு மேல் உள்ளது. 17ஆம் தேதிக்குள் இதனை அகற்ற நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்று 17 ஆனால் இன்று இது நடக்கும் பாடு இல்லை. இன்னும் 17 நாட்கள் ஆகலாம்.

இங்கு வேலை செய்யக்கூடிய நபர்கள் யாரும் நிபுணர்கள் கிடையாது. எண்ணெய் கழிவை அகற்றும் வேலைக்கு வெறும் பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து அகற்றச் சொல்வது மனிதாபிமானம் அற்ற செயல்.

எண்ணெய் கழிவு கொட்டியதற்கு நான் இல்லை, நீ இல்லை என்று ஒருவரை ஒருவர் கைக்காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எண்ணெய் கழிவு கடவுள் கொடுத்த வரம் அல்ல, துப்புரவு செய்ய ஏற்படும் செலவை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உயிர்க்கொல்லி வேலைகள் செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் பாதிப்புக்கான பணத்தை தர வேண்டும். இதில், தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நதிகள் நாம் பிறக்கும் முன்பே உள்ள நதிகள். சின்னக் குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடக் கூடிய விஷயம் அல்ல ஆறும், நதியும்.  எண்ணெயை வாளிகளில் அள்ளுவது கேவலமாக உள்ளது. சந்திராயனுக்கு ராக்கெட் விடும் காலத்தில் இதற்கான கருவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 

எண்ணெய் கழிவுகளை அகற்ற கருவிகள் உள்ளது. ஆனால் அந்த கருவிகளை கொண்டு வந்து அகற்றுவதற்கான செலவுகளை நிறுவனங்கள் ஏற்க வேண்டும். 

IPL_Entry_Point