தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Rain: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்..சென்னையை குளிர்வித்த மழை!

Chennai Rain: சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்..சென்னையை குளிர்வித்த மழை!

Karthikeyan S HT Tamil
May 01, 2023 11:11 AM IST

Chennai Rain: கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை மழை
சென்னை மழை

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் மே 1 (இன்று) முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களிலும், மே 4-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவல்லிக்கேணியில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மயிலாப்பூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, வடபழனி, தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவது சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்