தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பட்ஜெட் தாக்கல் பரபரப்புக்கு இடையே ஆளுநர் ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!

பட்ஜெட் தாக்கல் பரபரப்புக்கு இடையே ஆளுநர் ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!

Karthikeyan S HT Tamil
Feb 19, 2024 09:13 AM IST

தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் (பிப்.4) தான் ஆளுநர் டெல்லி சென்று வந்தார். அப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு இருந்த நேரத்தில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் 3 நாள்களுக்கு பிறகு தமிழகம் திரும்பிய ஆளுநர் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையானது.

இந்த நிலையில் தான் 4 நாட்கள் பயணமாக ஆளுநர் ரவி மீண்டும் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்