Palani fire accident:பழனி அருகே தனியார் நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து
பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் நூல் ஆலையில், பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து
திண்டுக்கல் : பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நூல் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏறபட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆயில் கேன் மூலம் தீ பற்றி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.