தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kamal Tweet : அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் - கமல்!

Kamal Tweet : அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் - கமல்!

Divya Sekar HT Tamil
Feb 14, 2023 11:22 AM IST

உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

காதலை கொண்டாடும் விதமாக இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், உங்களுக்கு பிரியானமானவர்களிடம் காதலை வெளிப்படுத்த இதைவிட சிறந்த நாள் இல்லை எனக் கூறலாம். லெட்டர் காதல், டெலிபோன் காதல், எஸ்எம்எஸ் காதலை கடந்த தற்போது டிஜிட்டல் முறையில் காதலர்கள் காதலித்து வருகின்றனர்.

காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டேவை தொடர்ந்து தான் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 

ஆனால் இந்த டே காதலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும் சிங்கிள்களுக்கு மிகவும் கடிமான ஒரு நாளாகவே இருக்கும். அதுவும் முரட்டு சிங்கிள்களுக்கு சொல்லவே தேவையில்லை. வாழ்க்கையின் விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள்.

ஆனால் காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த நாள் என்பது கிடையாது உங்கள் அன்பை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடையே கூட இந்த தினத்தை கொண்டாடி மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாளாக மாற்றலாம்.இதனிடையே காதலர் தினம் நமது கலாச்சாரம் இல்லை எனக்கூறி ஒருசில அமைப்புகள் அதனை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகளாவிய அன்பைசெழிக்க செய்ய நாமும் காதலர் தினம் கொண்டாடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்