தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Varanasi Court Allows Hindus To Pray In Southern Cellar Of Gyanvapi Mosque Read More Details

Varanasi court allows Hindus to pray: ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய நீதிமன்றம் அனுமதி

Manigandan K T HT Tamil
Jan 31, 2024 04:15 PM IST

கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் பிரார்த்தனை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி. (PTI)
வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி. (PTI) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

அஞ்சுமன் இன்டெசாமியா மஸ்ஜித் கமிட்டியின் வழக்கறிஞர் அக்லக் அகமது, இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன் என்று கூறினார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி மசூதி கமிட்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மசூதியின் சீல் வைக்கப்பட்ட பகுதியை அகழ்வாராய்ச்சி மற்றும் அறிவியல் பூர்வ ஆய்வு செய்ய கோரி நான்கு இந்து பெண்கள் நீதிமன்றத்தை நாடிய ஒரு நாள் கழித்து மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது, இந்த மசூதி கட்டப்படுவதற்கு முன்பு ஒரு பெரிய இந்து கோயில் இருந்தது என்று இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ) ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.


இதனிடையே, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்துவது தொடர்பான மனு மீது அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மற்றும் பிற எதிர் தரப்புகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று (ஜன. 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் ஞானவாபி ஆய்வு அறிக்கை "கருத்தில் கொள்ளத்தக்கது" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தலைமையிலான தனி பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சிருங்கர் கவுரி வழிபாட்டு வழக்கு 2022 (தற்போது வாரணாசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது) வழக்கில் ஐந்து வாதிகளில் ஒருவரான ராக்கி சிங் இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

பார் அண்ட் பெஞ்ச் அறிக்கையின்படி, 'சிவலிங்கம்' அமைந்துள்ளதாகக் கூறப்படும் பகுதியைத் தவிர்த்து, ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியை ஆய்வு செய்ய ASI-க்கு உத்தரவிடுமாறு ராக்கி சிங் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்பு, அத்தகைய உத்தரவை பிறப்பிக்க அக்டோபர் 2023இல் வாரணாசி நீதிமன்றம் மறுத்துவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராக்கி சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்துவது தொடர்பான மனு மீது அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி மற்றும் பிற எதிர் தரப்புகளுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று (ஜன. 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு உத்தரவில், நீதிபதி ஏ.கே.விஷ்வேஷா, 'சிவலிங்கம்' கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் பகுதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2022 மே 17 அன்று உத்தரவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது என்பதால், 'வுசுகானா' பகுதியில் ஆய்வு நடத்த தொல்லியத் துறைக்கு உத்தரவிடுவது பொருத்தமற்றது என்று வாரணாசி நீதிமன்றம் நியாயப்படுத்தியிருந்தது.

WhatsApp channel

டாபிக்ஸ்