தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ponmudy Case: பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு .. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Ponmudy Case: பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு .. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 02:50 PM IST

Ponmudy Case: சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தாா். இதன் மூலம், பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, 30 நாட்கள் அவகாசத்திற்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாா்.

இதனிடையே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் பொன்முடி சாா்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தண்டனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பொன்முடி தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜன.12) விசாரணை நடைபெற்றது.  அப்போது, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதிஷ் சந்திர சர்மா, சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்