தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Ilai Kozhukattai : ஒரு யம்மி ஸ்கான்ஸ் மட்டுமில்லை! ஆரோக்கியத்தை வாரி வழங்கும்! ராகி இலை கொழுக்கட்டை!

Ragi ilai Kozhukattai : ஒரு யம்மி ஸ்கான்ஸ் மட்டுமில்லை! ஆரோக்கியத்தை வாரி வழங்கும்! ராகி இலை கொழுக்கட்டை!

Priyadarshini R HT Tamil
Apr 20, 2024 10:09 AM IST

Ragi Kozhukattai : குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

Ragi ilai Kozhukattai : ஒரு யம்மி ஸ்கான்ஸ் மட்டுமில்லை! ஆரோக்கியத்தை வாரி வழங்கும்! ராகி இலை கொழுக்கட்டை!
Ragi ilai Kozhukattai : ஒரு யம்மி ஸ்கான்ஸ் மட்டுமில்லை! ஆரோக்கியத்தை வாரி வழங்கும்! ராகி இலை கொழுக்கட்டை!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு – தேவையான அளவு

இலை

பூரணம் செய்ய

தேங்காய் – ஒரு கப் (துருவியது)

வெல்லம் – ஒரு கப் (பொடித்தது)

செய்முறை

ராகி மாவை உப்பு சேர்த்து இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி கொழுக்கட்டை மாவுப்பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

தேங்காய் மற்றும் வெல்லத்தை கலந்து பூரணம் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

இலைகளை ஒரு கொழுக்கட்டை வைத்து மூடும் அளவுக்கு சின்னசின்னதாக செவ்வக வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு இலையை எடுத்து அதில் சிறிய உருண்டை ராகி மாவை எடுத்து தட்டவேண்டும். அதற்குள் பூரணத்தை நிரப்பி, இலையுடன், கொழுக்கட்டையை மூடி வேண்டும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தில் அடியில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, தட்டில் கொழுக்கட்டை உள்ள இலைகளை பரப்ப வேண்டும்.

நன்றாக வேகவைத்து எடுத்தால், ராகி இலை கொழுக்கட்டை, ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தயார்.

இதை மாலை நேரத்தில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு சூடான சிற்றுண்டியாக செய்துகொடுக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான ஸ்னாக்ஸ்.

ராகி மாவு பிசைவதற்கு சரியாக வரவில்லையென்றால், இதனுடன், சிறிது பச்சரிசி மாவை சேர்த்து பிசைந்துகொள்ளலாம்.

உருண்டையும், கொழுக்கட்டைக்கு தட்டும்போது சரியான வடிவங்கள் கிடைக்கவில்லையெனில் நெய் சேர்த்து உருட்டி, தட்டலாம்.

இதில் வழக்கமான கொழுக்கட்டைக்கு வைப்பதைவிட கொஞ்சம் அதிக பூரணம் வைக்கவேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும்.

இந்த கொழுக்கட்டை இலை வாசத்துடன் சுவை நன்றாக இருக்கும். சாதாரண அரிசி மாவில் செய்யும் கொழுக்கட்டையையும் இலையில் வைத்து இதுபோல் செய்யலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்