தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ridge Gourd Brinjal Kichadi : இட்லி, தோசைக்கு ஏற்ற அட்டகாசமான சைட் டிஷ்.. பீர்க்கங்காய் கத்தரிக்காய் கிச்சடி செய்யலாமா?

Ridge Gourd Brinjal Kichadi : இட்லி, தோசைக்கு ஏற்ற அட்டகாசமான சைட் டிஷ்.. பீர்க்கங்காய் கத்தரிக்காய் கிச்சடி செய்யலாமா?

Divya Sekar HT Tamil
Apr 20, 2024 08:37 AM IST

Ridge Gourd Brinjal Kichadi : இட்லி, தோசை, வெண் பொங்கலுக்கு ஏத்த அட்டகாசமான சைட் டிஷ் பீர்க்கங்காய் கத்தரிக்காய் கிச்சடி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

பீர்க்கங்காய் கத்தரிக்காய் கிச்சடி
பீர்க்கங்காய் கத்தரிக்காய் கிச்சடி

ட்ரெண்டிங் செய்திகள்

கத்தரிக்காய் - 3

பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

புளி - சிறிய எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 4

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கடுகு உளுந்து - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1. பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறவும். வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

2. புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்து 1 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

3. குக்கரில் நறுக்கிய பீர்க்கங்காய், கத்தரிக்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 3 முதல் 5 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

4. குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் வேகவைத்த கலவையை மசித்துக் கொள்ளவும்.

5. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

6. பின் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் புளிக்கரைசல், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சாம்பார் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

7. பின் மசித்து வைத்துள்ள கலவை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும். மசித்த கலவை புளியோடு சேர்ந்து 5 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

பீர்க்கங்காய் நன்மைகள்

பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி 6, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த உணவாகும். பீர்க்கங்காய், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். இது மலச்சிக்கல் பிரச்னைகளை எளிதாக்கும்.

பீர்க்கங்காய் உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். பீர்க்கங்காய், உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகள், ஆல்கஹால் எச்சங்களை அகற்ற உதவும். உடலில் கொழுப்பு குவிவதைத் தடுக்கவும் உதவும் என்பதால் கல்லீரல் செயல்பாட்டிற்கும் இது அற்புதமானதாகக் கருதப்படுகிறது.

பீர்க்கங்காய் கோடையில் அதிகப்படியான உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இது பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்