தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sprouted Ragi Porridge : முளைகட்டிய ராகி கஞ்சி! வாழைப்பழத்துடன் சேர்த்து இப்டி செய்ங்க வித்யாசமாக இருக்கும்!

Sprouted Ragi Porridge : முளைகட்டிய ராகி கஞ்சி! வாழைப்பழத்துடன் சேர்த்து இப்டி செய்ங்க வித்யாசமாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil
Apr 09, 2024 04:54 PM IST

Sprouted Ragi Porrige : கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

Sprouted Ragi Porridge : முளைகட்டிய ராகி கஞ்சி! வாழைப்பழத்துடன் சேர்த்து இப்டி செய்ங்க வித்யாசமாக இருக்கும்!
Sprouted Ragi Porridge : முளைகட்டிய ராகி கஞ்சி! வாழைப்பழத்துடன் சேர்த்து இப்டி செய்ங்க வித்யாசமாக இருக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சிவப்பு வாழைப்பழம் – 1

பேரிட்சைப்பழம் – 10 (விதைகள் நீக்கியது)

தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்

செய்முறை

கேழ்வரகை அலசி ஓரிரவு அல்லது 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறியபின் தண்ணீரை வடித்து ஒரு வெள்ளை துணியில் கட்டி, ஒரு டப்பாவில் இரண்டு நாட்கள் அப்படியே மூடி வைத்துவிடவேண்டும்.

நன்றாக முளைக்கட்டி வந்திருக்கும். அதை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதை பாலாக பிழிந்து, அந்த பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவேண்டும்.

பின்னர், வாழைப்பழம் மற்றும் பேரிட்சை பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை கலவையை கொதித்துக்கொண்டிருக்கும் கேழ்வரகில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அனைத்தும் நன்றாக இணைந்து கஞ்சி பதம் வந்தவுடன், அதை அடுப்பில் இருந்து இறக்கி தேங்காய் பூ தூவி அப்படியே பருகவேண்டும்.

ஒரு நாள் காலை உணவுக்கு பதிலாக இந்த கஞ்சி மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியதுடன் காலையில் டிபஃன் செய்யும் வேலையும் குறையும்.

இந்த வெயில் காலத்தில் ராகி கஞ்சி உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்