தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Matar Paneer : மணமணக்கும் மட்டர் பன்னீர் மசாலா! ரொட்டி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சூப்பர் மேட்ச்!

Matar Paneer : மணமணக்கும் மட்டர் பன்னீர் மசாலா! ரொட்டி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சூப்பர் மேட்ச்!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2024 09:58 AM IST

Mutter Paneer : மணமணக்கும் மட்டர் பன்னீர் மசாலா! ரொட்டி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சூப்பர் மேட்ச்!

Matar Paneer : மணமணக்கும் மட்டர் பன்னீர் மசாலா! ரொட்டி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சூப்பர் மேட்ச்!
Matar Paneer : மணமணக்கும் மட்டர் பன்னீர் மசாலா! ரொட்டி, சப்பாத்தி என எல்லாத்துக்கும் சூப்பர் மேட்ச்!

ட்ரெண்டிங் செய்திகள்

பன்னீர் – 150 கிராம்

மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

கரம்மசாலா தூள் – கால் ஸ்பூன்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 3

ஃப்ரெஷ் கீரிம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க

வெங்காயம் – 1

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு – 9

பூண்டு பற்கள் – 8

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, பூண்டு பற்கள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் எண்ணெய்விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும்.

விழுதை வதக்கும்போது அதில் உள்ள ஈரம் கைகளில் தெரிக்கும். அதனால் ஒரு சில நிமிடங்கள் சிறு இடைவெளி விட்டு மூடி வைத்து வதக்கவேண்டும். நடுவே அடிபிடிக்காமல் இருக்க லேசாக கிளறி விடவேண்டும்.

அவை வதங்கியதும் அரை கப் தண்ணீர் விட்டு கலந்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து பிரட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

பின்னர் பச்சை பட்டாணி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவேண்டும்.

பின்னர் நறுக்கிய பன்னீர் துண்டுகள், கரம்மசாலா தூள் சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விடவேண்டும். ஒரு கொதி வந்தபின் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் கீரிம் சேர்த்து கலந்து கடைசியாக நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவேண்டும்.

மசாலா கெட்டியாக இருந்தால் இளஞ்சூடான பால் அல்லது வெந்நீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். விருப்பப்பட்டால் கடைசியாக சிறிது உலர்ந்த வெந்தயக்கீரை இலைகள் சேர்த்து இறக்கவேண்டும்.

இதை சப்பாத்தி, ரொட்டி, நாண், பூரி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்தால், அடிக்கடி சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

பன்னீர் மற்றும் பச்சைப்பட்டணி இரண்டும் உடலுக்கு நல்லது. இரண்டும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பவை. எனவே இவற்றை அடிக்கடி உடலில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்