International Children's Book Day : சர்வதேச குழந்தைகள் புத்தக தின வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் என்ன தெரியுமா?
Internatinal Children's Book Day : இவரது தேவதை கதைகளுக்காக இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். உலகம் முழுவதிலும் குழந்தைகள் இலக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை ஆண்டர்சனின் எழுத்துக்கள். இவரது பிறந்த நாள் இந்த நாளை கொண்டாடுவதற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி வாசிப்பை வலியுறுத்தியும், உலகளவில் புத்தகங்கள் மீது குழந்தைகளுக்கு காதலை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவரின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மீது காதலை ஏற்படுத்துவதும், அவற்றின் பயன்பாட்டை அறியவைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். சர்வதேச குழந்தைகள் புத்தக பணியகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஸ்பான்சரை இந்த நாளுக்காக தேர்ந்தெடுக்கிறது.
இந்த பணியகம் அந்த ஆண்டின் கருப்பொருளையும், அந்த நாளை நடத்தும் நாட்டில் உள்ள எழுத்தாளரை இளம் புத்தக வாசிப்பாளர்களுக்கு கடிதம் எழுத கேட்டுக்கொள்கிறது. இந்த தகவலை அந்த நாட்டின் புகழ்பெற்ற சித்திர வடிவமைப்பாளரைக் கொண்டு போஸ்டர் மீது வரையவும் வைக்கிறது. புத்தகங்கள் மற்றும் வாசிப்பை மேம்படுத்த, பல வழிகள் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று செவ்வாய்கிழமை அது கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜப்பான் நாடு ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘உங்கள் கற்பனைக்கு சிறகு கொடுத்து கடல் கடந்து செல்லுங்கள்’ என்பது கருப்பொருளாகும்.
புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் மற்றும் 2018ம் ஆண்டு ஹெச்.சி ஆன்டர்சென் விருதுபெற்ற ஈக்கோ கடோனோ, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கடிதம் எழுதுகிறார். படம் வரை போஸ்டரை ஜப்பானிய கலைஞர் நானா ஃபுரியா வரைகிறார்.
இவர் ஸ்லோவேக்கியாவில் வசிக்கிறார். இந்தாண்டு சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தின் கீவேர்ட் கற்பனை என்பதாகும். கற்பனையை தூண்டுவது புரிதலை ஏற்படுத்தும் மற்றும் ஏற்கும் திறனைக் கொடுக்கும் என்று பணியகம் நம்புகிறது.
வரலாறு
இளைஞர்களுக்கான சர்வதேச புத்தக மையம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். 1953ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் சூரிச்சில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் குழந்தைகள் புத்தகங்கள் வழியாக புரிதலை வலியுறுத்துகிறது. தரமான புத்தகங்களை படிக்க குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளையும் எடுத்துக்கூறுகிறது.
1949ம் ஆண்டு முனிச்சில் இளைஞர்கள் நூலகத்தை உருவாக்கிய ஜெர்மனின் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஜெல்லா லெப்மேன் இந்த நாளை வலியுறுத்தினார். குழந்தைகள் இலக்கியம், அனுதாபம், புரிதல், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று எண்ணினார்.
1967ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்பட்டது. எதிர்பாராதவிதமாக டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சனின் பிறந்தநாளில் நடைபெற்றது.
இவரது தேவதை கதைகளுக்காக இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். உலகம் முழுவதிலும் குழந்தைகள் இலக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவை ஆண்டர்சனின் எழுத்துக்கள். இவரது பிறந்த நாள் இந்த நாளை கொண்டாடுவதற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.
முக்கியத்துவம்
இந்த நாள் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை படித்தவர்களாகவும், புத்தகம் வாசிப்பவராகவும் ஆவதற்கு ஊக்குவிக்கிறது. இளைஞர்களுக்கான சர்வதேச புத்தக மையம் இந்த நாளை ஒருங்கிணைக்கிறது. குழந்தைகள் இலக்கியத்தை கொண்டாடுகிறது மற்றும் ஆண்டர்சன் போன்றவர்களையும் நினைவு கூறுகிறது.
புத்தகங்கள் மூலம் குழந்தைகள் பல கோணங்களை பார்க்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அவர்களின் கற்பனைத்திறன் வளர்கிறது. அவர்கள் நீண்ட நாள் வாசிப்பதன் மீது காதல் கொள்கிறார்கள். கதைசொல்லல் என்பதன் மூலம் அவர்கள் கற்பனையை வளர்த்துக்கொள்வது அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது.
டாபிக்ஸ்