தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hbd Maxim Gorky Today Is The Birthday Of Maxim Gorky The Writer Who Made The World Understand The Struggles Of The Work

HBD Maxim Gorky : பட்டாளிகளின் பாடுகளை உலகுக்கு உணர்த்திய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Mar 28, 2024 06:00 AM IST

HBD Maxim Gorky : புரட்சிகரமான தனது எழுத்துக்களுக்காகவே மாக்சிம் கார்க்கி அடிக்கடி கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகளுக்கு கடும் தணிக்கை நடைபெற்றது. இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, கவிருமாவார். இவர் நிறைய புத்தகங்களை படித்து அறிவை விரிவாக்கி, சிந்தனையை சீர்திருத்திக்கொண்டே இருந்தார்.

HBD Maxim Gorky : பட்டாளிகளின் பாடுகளை உலகுக்கு உணர்த்திய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!
HBD Maxim Gorky : பட்டாளிகளின் பாடுகளை உலகுக்கு உணர்த்திய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘தாய்’ என்ற நாவலை எழுதியவர். இந்த நாவலின் கதைக்களம், ரஷ்யாவின் கம்யூனிச புரட்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பணிபுரிந்த தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாக இருந்ததோடு தாய், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இது எந்தளவுக்கு பாராட்டு பெற்றதோ, அதைவிட அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவலாகவும் இருந்தது. இது 5 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மாக்சிம் கார்க்கி பல்வேறு பணிகளுக்காக கிட்டத்தட்ட ரஷ்யா முழுவதும் பயணம் செய்துள்ளார். அந்த அனுபங்கள் தான் அவரை பிற்காலத்தில் எழுத்தாளர் ஆக்கியது. அவையே அவரது எழுத்திலுல் பிரதிபலித்தது. அதுவே அவரது எழுத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கும் உதவியது.

கார்க்கி துவக்க காலத்தில் எழுதிய சிறுகதைகள், நாடகம், கவிதை, நாவல்கள் என அனைத்தும் புகழ்பெற்றவை. மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் பிறந்தவர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். அதில் 1868ம் ஆண்டு பிறந்தவர். 5 வயதில் தந்தையை இழந்த அவர், 11வது வயதில் தாயையும் இழந்துவிட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமை காரணமாக இவர் பள்ளி செல்ல முடியவில்லை. தனது 8 வயது முதல் இவர் வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே சிரமப்பட்டு தானாவே முயற்சி செய்து ரஷ்யா, பிரெஞ்ச், இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளை கற்றார்.

வறுமையும், காலமும் அவரை பல்வேறு பணிகளை செய்ய வைத்தது. காலணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக கட்டிட வேலை, பின்னர் கப்பலில் வேலை என்று பல வேலைகளை செய்துள்ளார். இதனால் இவர் ரஷ்யா முழுவதும் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இந்த பயண அனுபவங்களே பிற்காலத்தில் அவர் எழுத்தை செழுமையாக்கின. இவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் யார் தெரியுமா? அவருடன் கப்பலில் பணிபுரிந்த மிகைல் அகிமோவிச் என்பவர்தான். 

இவருக்கு கோகோல், ஹென்றி பீல்டிங் ஆகிய நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். பின்னர் டுமாஸ், துர்க்கனேவ், டால்ஸ்டாய், டிக்கன்ஸ, ஆண்டான் செகாவ் ஆகியோரின் படைப்புகளை மிக குறுகிய காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு, படிப்பு, பயிற்சி ஆகியவை அவருடைய அறிவை கூர்மையாக்கியது. அவரின் சிந்தனை விரிவடைந்த பின்னர், அவரும் எழுத்தாளராக மாறினார்.

கையில் எந்த நேரமும் குறிப்பேடு வைத்துக்கொண்டு இருப்பார். அதில் தனக்கும் தோன்றும் விஷயங்களை எழுதிக்கொண்டிருப்பார். 1892ம் ஆண்டு இவர் தனது முதல் சிறுகதையான ‘மகர் சுக்ரா’ என்பதை வெளியிட்டார். மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். கொடுங்ககோல் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை ஏற்படுத்துவது, அதிகார வர்க்கத்தை எச்சரிப்பது, வீரம் ஆகியவை தான் இவர் எழுத்தின் சாரமாக இருந்தது.

புரட்சிகரமான தனது எழுத்துக்களுக்காகவே மாக்சிம் கார்க்கி அடிக்கடி கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகளுக்கு கடும் தணிக்கை நடைபெற்றது. இவர் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, கவிருமாவார். இவர் நிறைய புத்தகங்களை படித்து அறிவை விரிவாக்கி, சிந்தனையை சீர்திருத்திக்கொண்டே இருந்தார். நல்ல நினைவாற்றல் திறன்கொண்டவர். எழுதுவதற்கு பென்சில்களை மட்டுமே இவர் பயன்படுத்தினார். பட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்.

இவரது இலக்கியம் உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் எழுத்தில் பிரதிபலித்தது. சோஷியலிச எதார்த்த இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளராகவும் இருந்த மாக்சிம் கார்க்கி சமூகத்தின் பேச்சுக்களை சகித்துக்கொள்ள முடியாத மழலை மணம் கொண்டவராக இருந்தார். இதனால் தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றார். ஆனால் அதில் இருந்து தப்பிவிட்டார். ஆனால் தனது 68 வயதில் 1936ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்