En kadamai MGR: நேர்மை தவறாத காவலர் எம்ஜிஆர்..காவல்துறைக்கு எடுத்துக்காட்டு..60ஆம் ஆண்டில் என் கடமை
என் கடமை போன்ற சிக்கலான கதைக்களத்தைக் கொண்டு படத்தின் கிளைமாக்ஸ் வரை ரகசியத்தை உடைக்காமல் மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த திரைப்படங்கள் தற்போது மிகப்பெரிய வெற்றியைக் காண்கின்றன.
தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர் எம்.ஜி ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர். சினிமா மட்டுமல்லாது தமிழ்நாட்டையும் ஆட்சி செய்தார். கலைத்துறையின் மூலம் அரசியல் துறையைக் கைப்பற்றி மாபெரும் தலைவனாக இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
இவர் நடித்த எழுபதாவது திரைப்படம் என் கடமை. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எம்.ஜி.ஆர் வல்லவர். அதேபோல் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர். பாடல்களுக்காகப் படமா? படத்திற்காகப் பாடல்களா? என வித்தியாசம் தெரியாமல் வெற்றிகளைக் குவித்த நடிகர் எம்ஜிஆர்.
அப்படி ஒரு கடமை தவறாத காவல்காரரின் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது தான் இந்த என் கடமை திரைப்படம். கதையைச் சொல்லும்போது சிக்கலாக இருக்கும். ஆனால் படமாகப் பார்க்கும் பொழுது தனி மனிதனாக ஒருவர் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு பணக்கார முதலாளிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் ஒரு ஏழைப் பெண்ணை காதலித்து தந்தையை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார். கொஞ்ச நாளில் இறந்து விடுகிறார். அந்தப் பெண்ணை பணக்கார மாமனார் ஏற்க மறுக்கிறார்.
அவருக்கு நியாயம் பெற்றுத் தருவதாகக் கூறி தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார் காவல் அலுவலர் எம்.ஜி.ஆர். எம்ஜிஆரின் தங்கை அந்த பணக்கார முதலாளியின் இரண்டாவது மகனைக் காதலிக்கிறார். அந்த பணக்கார முதலாளியின் மகளை எம்ஜிஆர் காதலிக்கிறார்.
அந்த ஏழைப் பெண் கொஞ்ச நாளில் காணாமல் போகிறார். பணக்கார முதலாளியின் வீட்டிற்குச் சென்று போய் பார்க்கும் பொழுது அங்கே அவர் பிணமாகப் புதைந்து கிடக்கிறார். அதனை எம்ஜிஆர் பார்த்து விடுகிறார்.
காதலியைப் பார்ப்பதா? தங்கையின் காதலைப் பார்ப்பதா? ஆதரவற்று இறந்து போன பெண்ணுக்கு நியாயம் வாங்கி தருவதா? என்ற சூழ்நிலையில் எம்ஜிஆர் நிற்கிறார். ஆனால் கடமை தவறாமல் நியாயத்தின் வழியே தன் பாதையை வகுத்துக் கொள்கிறார். ஆனால் இந்த கதாபாத்திரங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை அதுதான் படத்தில் இருக்கும் மிகப்பெரிய ரகசியம்.
அரசியல் காரணமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த இந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைக் காண வேண்டிய இந்த திரைப்படத்தின் பாதை பாதியிலேயே முடிந்தது. ஆனால் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டன.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகிய 60 ஆண்டுகளாகின்றன. இது போன்ற சிக்கலான கதைக்களத்தைக் கொண்டு படத்தின் கிளைமாக்ஸ் வரை ரகசியத்தை உடைக்காமல் மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்த திரைப்படங்கள் தற்போது மிகப்பெரிய வெற்றியைக் காண்கின்றன.
எந்த விதத்தில் கதையைக் கொண்டு சென்றாலும் படத்தின் இறுதியில் நேர்மையை மையப்படுத்தி நகரும் அளவிற்கு ஏற்றார் போல் தனது படத்தை அமைத்துக் கொள்ளக் கூடியவர் எம்ஜிஆர். அதுதான் இவரது படத்தின் வெற்றிக்குக் காரணம். அதுவே இன்றும் நாம் இந்த படத்தை நினைவு கூறுவதற்கும் காரணம். காவல்துறைக்கு நேர்மையை உணர்த்தும் திரைப்படங்களில் இந்த படத்திற்கு எப்போதும் தனி சிறப்பு இடம் உண்டு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்