தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமா எப்படி உருவானது ? - ஒரு குட்டி வரலாறு

சினிமா எப்படி உருவானது ? - ஒரு குட்டி வரலாறு

Aarthi V HT Tamil
Apr 22, 2022 03:59 PM IST

புராணக் கதைகளை , இதிகாசக் கதைகளைப் பாடல் பாதி , வசனம் பாதி என திரைப்படங்களாக 1940 ஆண்டு முதல் இயக்கினார் .

சினிமா எப்படி உருவானது
சினிமா எப்படி உருவானது

ட்ரெண்டிங் செய்திகள்

1931 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் தொடங்கி இன்று வரை பல தரப்பட்ட படங்கள் வந்த வண்ணம் உள்ளன அதில் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு ரசிகர்களின் ரசனை மாற்றத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களை கண்டுள்ளது , இந்த தமிழ் சினிமா. அப்படி தமிழ் சினிமா கண்ட மாற்றங்களைப் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது .

1930 -1940

முதல் பேசும்படம் வரத் தொடங்கிய காலக் கட்டம் அது . எதை திரைப்படங்களாக எடுப்பது என்று சற்று தயக்கம் இருந்த போதும் நாம் அதுவரை காதில் கேட்டு மட்டும் உணர்ந்த நாளடைவில் பார்த்த புராண கதைகளைத் திரையிடலில் காட்சிப்படுத்தப்பட்டது .

1940 -1950

கருப்பு , வெள்ளையில் திரைப்படங்களைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு 1944 ஆம் ஆண்டு வெளியான , ‘ ஹரிதாஸ் ‘ திரைப்படம் முழு நீள கலர் படமாக வந்து விருந்து அளித்தது. இருப்பினும் கதைகளில் எந்த மாற்றமும் இல்லை . புராணக் கதைகளை , இதிகாசக் கதைகளைப் பாடல் பாதி , வசனம் பாதி என திரைப்படங்களாக இயக்கி வந்தனர் .

1950 -1960

இந்த காலக் கட்டத்தில் நிறைய நடிகர்கள் நிறைய கதை மாந்தர்கள் உள்ளே வர ஆரம்பித்தனர். எம்ஜிஆர் , சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் நடிப்பில் ஆட்சி செய்ய ஆரம்பித்த காலம் அது. இந்த காலகட்டத்தில் தான் புராண கதைகள் எல்லாம் புறந்தள்ளிவிட்டு புதிய கதைகள் உருவம் பெற்றன.

1960 -1970

60 -70 களில் தான் தமிழ் சினிமா மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது என்றே சொல்லலாம். அதுவரை வெறும் வசனம்,நடிப்பு என்று இருந்த சினிமாவில் இசை,நடனம்,சண்டைக் காட்சிகள் என பல உத்திகளைக் கையாளத் தொடங்கினர். அத்தோடு பல புது கதைகளும் உருவாகத் தொடங்கியது .

1970-1980

சினிமாவின் ரசனை மாறத் தொடங்கிய சில காலங்களிலேயே இசை மற்றும் காட்சி அமைப்பிலும் பல மாற்றங்கள் வந்தன . குறிப்பாக இசை. ஒரு இசை தகடு வெளியானதும் அந்த இசையைக் கேட்டு திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்களும் உண்டு . வெறும் கதை சொல்ல கருவியாக இருந்த சினிமா , இயல் , இசையாக கலை உருவம் பெற்றது. அந்தக் காலகட்டத்தை கதையைப் பொறுத்தவரை புதுபுது கதாசிரியர்கள் என நிறையக் கதைகள் நிரம்பி வழிய தொடங்கி சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியது.

1980 - 1990

சினிமா ரசிகர்கள் கூட்டம் பொழுது போக்கிற்காக அலைமோத தொடங்கியதும் , வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் குடும்பம், காதல், நட்பு என மனிதர்களின் உணர்வுகள் மற்றும் உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகளும் வரத் தொடங்கின. இந்த காலகட்டத்தில் தான் காதல் படங்கள் அதிகம் வந்தன. ஒரு பக்கம் இது கலாச்சார சீர்கேடு என்று விமர்சனம் வைத்தாலும் , மறுபக்கம் ரசிகர்கள் கூட்டம் ஓயவே இல்லை.

1990 -2000

இந்த காலகட்டம் உலகமே டிஜிட்டல் மயமாக மாற தொடங்கிய ஒரு காலம். டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டது சினிமா. அதுவரை ஃபிலிம் கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வந்த சினிமா , அதன் பிறகு டிஜிட்டல் கேமராவாக மாறியது. இசையிலும் இசை வாத்தியங்களை தாண்டி கம்ப்யூட்டர் மியூசிக்கும் அதிகம் பயன்பாட்டிற்கு வந்தது.

2000-2010

நவீன யுகம் என்று அழைக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டுகளில் , கதைப் பஞ்சம் ஏற்படவே எல்லோரும் ஜானர்'க்குள் படங்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். அதாவது குறிப்பிட்ட ஜானரிலேயே தான் படங்கள் வந்த வண்ணம் இருந்தது. உதாரணத்திற்கு ஒரு வருடத்தில் பேய் படங்கள் அதிகம் வந்தால் , அந்த வருடம் முழுக்க பேய் படங்கள் மட்டுமே வந்தது. இதனால் கதை பஞ்சம் ஏற்பட்டது .

2010 -2020

2010 -2020 இந்தப் பத்து ஆண்டை தான் சினிமாவின் மறுஜென்மம் என்றே கூறலாம். ஏனென்றால் எந்த ஒரு ஜானர்'க்குளும் மாட்டிக் கொள்ளாமல் எந்த ஒரு ட்ரெண்டையும் பின்பற்றாமல் கலவையாக பல படங்கள் வந்தன. அதில் , இதுவரை தமிழ் சினிமாவில் தொடாத புது கதை களமாக இருந்தது . அதே போல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் , முழுமையாகப் பயன்படுத்தி CG எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் அச்சுப்பிசகாமல் எடுக்கப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டு பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது ’ ஓடிடி யுகம் ‘ . அதாவது ஒரு படம் நேரடியாக திரைக்கு சென்று பார்க்காமல் வீட்டிலேயே மொபைல் போனிலேயே பார்த்துக் கழிப்பது தான் இன்றைக்கு இருக்கும் சினிமாவின் டிரெண்ட்.

முன்னது சொன்னது போலவே என்னதான் சினிமா ஆயிரம் மாற்றங்கள் கண்டாலும் , அதன் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சத்தை தாண்டி மக்களின் வாழ்வியலில் ஒன்றாக மாறிவிட்ட ஒன்று . அது எத்துணை கால மாற்றங்கள் கண்டாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வமும் , ரசிகர் கூட்டமும் என்றும் குறையாது என்பது தான் நிதர்சனமான உண்மை . 

IPL_Entry_Point

டாபிக்ஸ்