தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Panchu Arunachalam : இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.. பாதி கதை அருணாச்சலம் என ஏன் அழைத்தார்கள் தெரியுமா?

HBD Panchu Arunachalam : இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.. பாதி கதை அருணாச்சலம் என ஏன் அழைத்தார்கள் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Jun 18, 2023 05:15 AM IST

மணமகளே, மருமகளே வா.. பாடல் ஒலிக்கும் காலம் வரை பஞ்சு அருணாச்சலம் புகழ் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

பஞ்சு அருணாச்சலம்
பஞ்சு அருணாச்சலம்

ட்ரெண்டிங் செய்திகள்

கவிஞர் கண்ணதாசன், பட தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் இவரின் சித்தப்பா ஆவார்.இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகிற்கு எழுதியுள்ளார். கவிஞர் கண்ணதாசன் நடத்திய "தென்றல்" என்ற பத்திரிக்கையில் "அருணன்" என்ற பெயரில் இவர் எழுதிய சில கதைகள் வெளியாகியது.

அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். பஞ்சு அருணாச்சலத்தை இளையராஜா சந்தித்தபோது, ​​முன்னதாக ஏதேனும் பாடல்களை இயற்றியிருக்கிறாரா என்று கேட்டார். இளையராஜா சாதாரணமாக ஒரு பாடல்களைப் பாடினார், அவற்றில் ஒன்று "அன்னக்கிளி உன்னாய் தேடுதே". இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட பஞ்சு அருணாசலம் இந்த பாடல்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு திரைப்படக் கதையை எழுத முடிவு செய்தார்.

சுப. முத்துராமன் இயக்கிய 15 படங்களுக்கு மேல் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார்.இவர் கதை - வசனம் எழுதி தயாரித்த, ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்துக்கு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. தமிழக அரசின் கலைமாமணி விருதை இவர் பெற்றுள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன் படங்களை அதிக அளவில் தயாரித்த பெருமை பஞ்சு அருணாசலத்துக்கு உண்டு.

சாராத என்ற படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியாக தயாராக இருந்தது. ஆனால் கடைசியில் ஒரு பாடல் இணைக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்தார். அப்போது கண்ணதாசன் அவர்கள் ஊரில் இல்லை எனவே அந்த பொறுப்பை பஞ்சு அருணாச்சலம் இடம் இயக்குனர் கொடுத்தார். அப்படி வந்த பாடல் தான் மணமகளே, மருமகளே வா...பாடல். இன்றும் அனைத்து திருமண நிகழ்வுகளிலும் இந்த பாடல்கள் தான் ஒலித்து கொண்டு இருக்கின்றனர்.

இவர், இளைய தலைமுறை (1977), என்ன தவம் செய்தேன் (1977),சொன்னதை செய்வேன் (1977), நாடகமே உலகம் (1979), மணமகளே வா (1988) புதுப்பாட்டு (1990), கலிகாலம் (1992) தம்பி பொண்டாட்டி (1992) போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை (1979), கல்யாணராமன் (1979), எங்கேயோ கேட்ட குரல் (1982), ஆனந்த ராகம் (1982) ஜப்பானில் கல்யாண ராமன் (1985), குரு சிஷ்யன் (1988), மைக்கேல் மதன காமராஜன் (1991), ராசுக்குட்டி (1992) தம்பி பொண்டாட்டி (1992), வீரா (1994), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), ரிஷி (2001), சொல்ல மறந்த கதை (2002) மாயக் கண்ணாடி (2007) போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.

இப்படி பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு இது சாதரணமாக கிடைக்கவில்லை. இவர் நிறைய கதைகளை வைத்து இருந்த டைம் இவரின் கதைகளை சிலர் படம் எடுக்க முடிவு செய்தனர். ஆனால் இவர் கதையை படம் எடுத்த 8 படங்களும் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனால் இவரை பாதி கதை அருணாச்சலம் என கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

பின்னர் இவருடைய கதைய சித்த ராம கிருஷ்ணன் மூர்த்தி ஹலோ பார்ட்னர் என்ற பெயரில் எடுத்தார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. பின்னர் பஞ்சு அவர் ஒழுங்க எடுக்கல அதுதான் படம் ஓடவில்லை என கூறினார். பின்னர் அடுத்த கதைய அவருக்கு கொடுக்கல. எல்லாரும் வற்புறுத்தி கேட்டதினால் கல்யாணமாம் கண்யாணம் படம் வந்தது. அதற்கு பிறகுதான் வருடம் 4 படம் கொடுக்க ஆரம்பித்தார். மணமகளே, மருமகளே வா.. பாடல் ஒலிக்கும் காலம் வரை பஞ்சு அருணாச்சலம் புகழ் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்