தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bhola Shankar: அஜித் பிறந்தநாள்.. வேதாளம் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bhola Shankar: அஜித் பிறந்தநாள்.. வேதாளம் தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aarthi V HT Tamil
May 01, 2023 12:38 PM IST

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போலா சங்கர்
போலா சங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு 'போலா சங்கர்' குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து சிரஞ்சீவி தொடர்பான மூன்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதில் சிரஞ்சீவி டாக்ஸி டிரைவராக காணப்பட்டார். கொல்கத்தாவின் பின்னணியில் நீல நிற சீருடையில் சிரஞ்சீவி ஸ்டைலான தோற்றத்துடன் நிர்கிறார். இது அவரின் ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளது.

இந்நிலையில் போலா சங்கர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படம் தாமதமாகும் என கடந்த இரண்டு நாட்களாக வதந்திகள் பரவிய நிலையில், சரியான நேரத்தில் வருவது உறுதி என படக்குழு சொல்லாமல் சொல்லி உள்ளது. ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்காக போலா சங்கர் உருவாகி வருகிறது. சகோதரிகளுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து உருவாகும் இக்கதையில், தெலுங்கு நேட்டிவிட்டிக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குநர் மெஹர் ரமேஷ்.

போலா ஷங்கர் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ராமபிரம் சுங்கராவின் கீழ் அனில் சுங்கரா தயாரிக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்