தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mamannan : ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Mamannan : ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Divya Sekar HT Tamil
May 01, 2023 11:11 AM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் புதிய போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெயிட்டுள்ளார்.

மாமன்னன்
மாமன்னன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இப்படத்தை 125 நாட்களுக்கு மேல் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஜூன் மாதம், வெளியாகும் என என தெரிவிக்கப்பட்டது. மாமன்னனின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தின் திரையரங்கு வெளியீடு நடைபெறவுள்ளது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் நேற்று புதிய போஸ்டர் வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியுடன் இருக்கிறார். அவர் பக்கத்தில் வடிவேலு வேட்டி சட்டையில் கையில் தூப்பாக்கியுடன் அமர்ந்து இருந்தார்.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெயிட்டுள்ளார். மேலும் அதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”- மாமன்னன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்