தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Wishes Ajith: கடனால் தப்பி ஓடிய நண்பர்.. செய்தி கேட்டு அஜித் என்ன செய்தார் தெரியுமா?

HT Wishes Ajith: கடனால் தப்பி ஓடிய நண்பர்.. செய்தி கேட்டு அஜித் என்ன செய்தார் தெரியுமா?

Aarthi V HT Tamil
May 01, 2023 10:58 AM IST

நடிகர் அஜித் கடனால் தப்பி ஓடிய நண்பருக்கு உதவி செய்தது குறித்து வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளர் அந்தணன் நமக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அஜித்
அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு கட்டத்தில் அஜித்தை தன்னுடைய மகன் மாதிரி பார்த்துக் கொண்டார். அஜித்துடன் பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவர் இருந்து இருக்கிறார். ஆர்யா நடித்த நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. அதற்காக நீளமான முடியைக் கூட அஜித் வளர்த்தார். பின்னர் அறிவிப்பு இல்லாமல் அஜித் அதில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் ஹோட்டலில் பணம் கொடுக்கச் சொல்லி அஜித்திற்க்கு மிரட்டல் வந்தபோது, பிரதாப் உடன் நின்று இருக்கிறார். அவ்வளவு நெருக்கமாக இருந்த பிரதீப் எப்படி இருக்கிறார்? எங்கு சென்றார்? என்பதே தெரியவில்லை.

இது குறித்து நாம் வலைப்பேச்சு யூ-டியூப் சேனல் பத்திரிக்கையாளரான அந்தணனிடம் பேசினோம். இதோ இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அவர் அளித்த பேட்டி..

"சிறிது காலத்திற்கு முன்பு தனியாக தொழில் தொடங்குவதாகச் சொல்லி பிராத் அகலக்கால் வைத்தார். அதனால் அவருக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம். கை காசு போடாமல் கடன் வாங்கி தொழில் தொடங்கியதால், கடன்காரர்கள் தொல்லை ஆரம்பித்தது.

பின்னர் ஒரு கட்டத்தில் பிரதாப்பிடம், அஜித் உங்கள் நண்பர் தானே அவரிடம் சென்று நீங்கள் வாங்கிய கடனை நாங்கள் வசூலித்துக் கொள்கிறோம் என பைனான்சியர்கள் கூறி உள்ளனர்.

உடனே பிரதாப் தன்னால், அஜித்திற்க்கு எந்த கஷ்டமும் வந்துவிட கூடாது என எண்ணி இருக்கும் இடம் கூட தெரிய கூடாது என்று எண்ணித் தலைமறைவாகி வாழ்க்கை வாழ்ந்தார்.

சுமார் 5 ஆண்டுகள் மேல் அவர் தேடியும் கிடைக்கவில்லை. அவர் வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் பிரதாப் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்து கஷ்டப்பட்டு உள்ளார்.

இந்த தகவல் எப்படியோ அஜித்திற்கு தெரியவரச் சென்னை வந்த பிரதாப்பை கண்டுபிடித்து அவரை தன்னுடன் வைத்து பார்த்து வருகிறார்” என்றார்.

உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் கூட தன்னால் அஜித்துக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று எண்ணி பிரதாப் நண்பனிடம் செல்லாமல் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்