தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: மதுவிலக்கு கோரும் திருமா! சாத்தியமில்லை என திமுக பதில்! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Oct 02, 2024, 07:17 PM IST

google News
TOP 10 NEWS: விசிகவின் மது விலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு, மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் ரகுபதி பேட்டி, இலங்கை தூரகத்தை முற்றுகையிடும் பாமக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: விசிகவின் மது விலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு, மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் ரகுபதி பேட்டி, இலங்கை தூரகத்தை முற்றுகையிடும் பாமக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: விசிகவின் மது விலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு, மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அமைச்சர் ரகுபதி பேட்டி, இலங்கை தூரகத்தை முற்றுகையிடும் பாமக உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.மதுவிலக்கு தேசிய கொள்கையாக்க தீர்மானம்

மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் 47-இன் படி மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் விசிகவின் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றம். 

2.தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை 

“அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை அமலில் இருக்கும்போது தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கைக் கொண்டு வருவது சாத்தியமில்லை” என மதுவிலக்கை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்.

3. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் 

சட்டக்கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் அவற்றை மூடிவிடலாம். சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிருஷ்டவசமானது; சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்பும் எதிர்காலத் தலைமுறையை இது அழித்துவிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். 

4. ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் இடமாற்றம் 

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக உள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாணை துறை ஆணையராக நியமனம், மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த நந்தக்குமார் ஐஏஎஸ் மின்சார வாரியத் தலைவராக நியமனம். 

5.உதயநிதிக்கு தனி செயலாளர் நியமனம் 

உயர்க்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராக நியமனம். 

6.சொத்து வரிக்கு எதிராக அதிமுக போராட்டம் 

சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி அக்டோபர் 8ஆம் தேதி அதிமுக மனித சங்கிலி போராட்டம். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

7.குற்றாலத்தில் குளிக்கத் தடை 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு. 

8. இலங்கை தூதரகம் முற்றுகை 

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அக்டோபர் 8ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பா.ம.க. சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு. 

9.பள்ளிக்கல்வித்துறைக்கு கண்டனம் 

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும்17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் இ.ஆ.ப. அதிகாரி ஆர்த்திக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. 

10.காமராஜருக்கு முதலமைச்சர் புகழாரம்

இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி