IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்-12 ias officials got transferred after udhaynidhi stalin becomes deputy cm - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ias Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்

IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 02, 2024 03:59 PM IST

உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்
IAS Transfer: உதயநிதி துணை முதலமைச்சர் ஆன பிறகு முதல் மாற்றம்..யாருக்கு எந்த துறை - முழு விவரம்

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மாற்றம்

தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யப்பிரத சாஹூ, விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வளத் துறைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மின்வாரியத் துறை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாருக்கு என்ன துறை?

  • மின்வாரியத் துறைத் தலைவராக நந்தகுமார் ஐஏஎஸ்,
  • சமூக நலத் துறை ஆணையராக லில்லி ஐஏஎஸ் நியமனம்
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி ஐஏஎஸ், கல்லூரி கல்வித் துறை ஆணையராக நியமனம்.
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையராக விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ் நியமனம்
  • கைத்தறித் துறை செயலாளராக அமுதவல்லி ஐஏஎஸ் நியமனம் நியமனம்
  • ஜவுளித் துறையின் இயக்குனராக லலிதா ஐஏஎஸ் நியமனம்
  • பொதுத் துறை துணைச் செயலராக பவன்குமார் ஐஏஎஸ் நியமனம்
  • மனிதவள மேம்பாட்டுத் துறை செயலராக விஜயராஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலைக்கு பின் மறுபடியும் மாற்றம்

முன்னதாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார்.

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்று உள்ளது.

உதயநிதி துணைமுதலமைச்சர் ஆன பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 29ஆம் தேதி துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 

இதன் பின்னர் தமிழ்நாடு ஐஏஎஸ் பதவியில் முதல் முறையாக தற்போது பணியிடை மாற்றம் நடந்துள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.