தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil

Sep 14, 2024, 02:20 PM IST

google News
TOP 10 NEWS: ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு, ராமர் குறித்து ஆளுநர் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
TOP 10 NEWS: ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு, ராமர் குறித்து ஆளுநர் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

TOP 10 NEWS: ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு, ராமர் குறித்து ஆளுநர் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1.ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று பேசும் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட பழைய வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு. தனது சமூக வலைதளத்தில் இரண்டு முறை வீடியோவை பதிவிட்டு மீண்டும் நீக்கியதால் தொண்டர்கள் குழப்பம்.

2.திருமா குறித்து முதல்வர் பேச்சு

’மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் இல்லை’ என திருமாவளவனே கூறிவிட்டார். அதிமுகவை மாநாட்டிற்கு அழைத்தது தொடர்பான கேள்விக்கு அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பதில்.

3.அமைச்சரவை மாற்றமா?

சொன்னதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

4.விசிக மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு 

விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது தேமுத்திக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து. எதிர்கால இளைஞர்கள் வாழ்கை கேள்விக்குறி ஆகி உள்ளதாக விமர்சனம். 

5.குரூப் -2 தேர்வு 

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு. 2327 காலி பணியிடங்களுக்கு சுமார் 794000 பேர் போட்டி. 

6.தங்கம் விலை உயர்வு 

தங்கம் சவரனுக்கு இரண்டு நாட்களில் ரூபாய் 1280 ஆக அதிகரிப்பு. சென்னையில் ஒரு சவரன் ரூபாய் 54,920-க்கு விற்பனை.

7.ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு எதிர்ப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன. பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்த தமிழக அரசே துணை போவது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. 

8.தலைவர்கள் ஓணம் பண்டிகை வாழ்த்து 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஓணம் பண்டிகை வாழ்த்து. 

9.ராமர் குறித்து ஆளுநர் பேச்சு

ராமர் வடநாட்டுக்கடவுள் என்ற கருத்து தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டதால் நமது இளைஞர்கள் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இழந்து உள்ளனர். ராமர் நமது நாட்டை இணைக்கும் பசையாக உள்ளார். அவரை இங்கு இருந்து நீக்க முயன்றால் பாரதம் இருக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

10.வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை 

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடைபெற்றது. இதில் துறை செயலாளர்கள், காவல்துறை, தீயணைப்பு, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் மழைகாலத்தை எதிர்கொள்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி