Northeast Monsoon: அக்டோபரில் 43 சதவீதம் குறைந்த போன வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Northeast Monsoon: அக்டோபரில் 43 சதவீதம் குறைந்த போன வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

Northeast Monsoon: அக்டோபரில் 43 சதவீதம் குறைந்த போன வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

Kathiravan V HT Tamil
Oct 31, 2023 12:57 PM IST

”கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது”

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்

பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சிலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.