தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டிஜிபி முதலுதவி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல முக்கிய செய்திகள் (ஆக.15)

டிஜிபி முதலுதவி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல முக்கிய செய்திகள் (ஆக.15)

Divya Sekar HT Tamil

Aug 15, 2022, 05:24 PM IST

டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.
டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை இன்று முதல் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

குரோம்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதி 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நீரில் மூழ்கிய சிறுவனுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து உதவிய சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

துறையூர் அருகேயுள்ள பச்சைமலையில் முந்திரி பருப்பை விழுங்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் 4 வயது மகனுடன், தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சினிமா சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிகணினி வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிள்ளைகள் இறந்த துக்கத்தில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்துள்ளார்.

விடியா திமுக அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் , திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பவள விழாவினையொட்டி நேரில் சென்று வாழ்த்தினார்.

டாபிக்ஸ்