Tamil Top 10 news: பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வரையான முக்கிய செய்திகள்
Aug 16, 2024, 08:06 AM IST
Morning Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Morning Top 10 news: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
இன்று விண்ணில் பாய்கிறது SSLV D3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கை கோள் இ.ஓ.எஸ்.08 இந்த செயற்கை கோளை சுமந்தபடி எஸ்.எஸ்.எல்.வி டி -3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட உள்ளது.
நீலகிரி கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் பெரும் பதற்றத்த்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் பெண்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை அறிவிப்பு
ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை அம் மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா அறிவித்தார் மாதவிடாய் சுழற்சியின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் இருப்பினும் இந்த விடுமுறை எடுத்துக் கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது என்று அவர் தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது
முன்னாள் அதிமுக எம்எல்ஏ காலமானார்
திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ் காலமானார். பெங்களூர் தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கே.ஜி.ரமேஷ் காலமானார். முன்னாள் எம்எல்ஏ கே ஜி ரமேஷ் மறைவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று காலை ஒன்பதரை மணிக்கு நடைபெறுகிறது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் ராயப்பேட்டையில் கூட்டம் நடைபெற உள்ளது.
நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து
நாகை இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குகிறது. நிர்வாக பிரச்சனைகளால் நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று கப்பல் போக்குவரத்து என்று தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பயணிகள் கட்டணமாக ரூபாய் 5000 முதல் 7000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பலின் முதல் பயணம் காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.
தைவானில் நிலநடுக்கம்
தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.
டாபிக்ஸ்