தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News : களை கட்டிய சுதந்திர தின கொண்டாட்டம் முதல் Whoவின் பெருந்தொற்றுக்கான அவசர நிலை அறிவிப்பு வரை!

Tamil Top 10 News : களை கட்டிய சுதந்திர தின கொண்டாட்டம் முதல் WHOவின் பெருந்தொற்றுக்கான அவசர நிலை அறிவிப்பு வரை!

Aug 15, 2024, 12:08 PM IST

google News
Tamil Top 10 News : குரங்கு அம்மை வைரஸ் காங்கோவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்றுக்கான அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 542 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
Tamil Top 10 News : குரங்கு அம்மை வைரஸ் காங்கோவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்றுக்கான அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 542 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tamil Top 10 News : குரங்கு அம்மை வைரஸ் காங்கோவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்றுக்கான அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 542 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Morning Tamil Top 10 News : உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

செங்கோட்டையில் மூவர்ணக்கொடி

இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி (வியாழக்கிழமை) இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடர்ந்து தனது 11-வது சுதந்திர தின உரையை மோடி நிகழ்த்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:30 மணிக்கு செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கான தனது உரையை நிகழ்த்த தொடங்கி உள்ளார்.

கலைஞர் கருணாநிதிக்கு கிடைக்க கூடிய மரியாதை - அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி ஐயா உடைய 100 ஆண்டு கால சாதனையாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்கள். அந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை அவர் அழைத்து இருந்தார். இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன். கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல காலகட்டத்தில் வேலை செய்து உள்ளனர்.

கச்சத்தீவில் உரிமை போனதால்.. ஆர்.என்.ரவி பேச்சு

மீன்பிடித்தல் நம்முடைய வாழ்வியலில் ஒன்று கச்சத்தீவு உரிமை போனதால் நமது மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்பு

நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தங்கலான் திரைப்படம் வெளியீடு

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடந்து இன்று தங்கலான் திரைப்படம் வெளியாகியது.

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம்

கேரளமாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்ககம் இல்லை - நீதிமன்றம் திட்டவட்டம்!

கடந்த வாரம் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் தரக் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்!

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) வெளியிட்டுள்ள உத்தரவில், 1993-ஆம் ஆண்டு இந்திய வருவாய் அலுவலரும் (ஐஆர்எஸ் அலுவர்), வருமான வரித்துறை அதிகாரியுமான ராகுல் நவின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் பதற்றம்

கொல்கத்தாவின் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மேற்கு வங்கத்தில் ஆண்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வீதிகள், சந்திப்புகள் மற்றும் பிரதான சாலைகளில் போராட்டத்தில் இறங்கிய நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பெருந்தொற்றுக்கான அவசர நிலையை அறிவித்த WHO

குரங்கு அம்மை வைரஸ் காங்கோவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியதையடுத்து உலகளாவிய பெருந்தொற்றுக்கான அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோயால் இந்த ஆண்டில் மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 542 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிர்க்க நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை