தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Si Threatens: விளாத்திகுளம் அருகே செய்தியாளர்களை மிரட்டிய எஸ்ஐ!

SI threatens: விளாத்திகுளம் அருகே செய்தியாளர்களை மிரட்டிய எஸ்ஐ!

Karthikeyan S HT Tamil

Sep 22, 2022, 08:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து, கைது செய்வேன் என்று மிரட்டிய காவல் உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை கிராமம் வேம்பார். இந்தப் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இடப்பிரச்னை சம்பந்தமாக இன்று (செப்.22) சூரங்குடி காவல் நிலையத்தில் வைத்து சமதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதை செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன்களை பறித்துக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஒருமையில், பேசி கைது செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும், செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து செல்போன்களை பறித்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

<p>சூரங்குடி காவல் நிலையம்.</p>

காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்