தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Govt Art And Culture : கலை ஆர்வம் உள்ள மாணவரா நீங்கள்? கட்டிக்கலையில் இத்தனை படிப்புகளா? – விவரங்கள் உள்ளே!

Govt Art and Culture : கலை ஆர்வம் உள்ள மாணவரா நீங்கள்? கட்டிக்கலையில் இத்தனை படிப்புகளா? – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil

May 20, 2023, 11:25 AM IST

Govt Art and Culture : பொறியியல், மருத்துவம், வணிகம், அறிவியல் படிப்புகளுக்கு இணையான கட்டிடக்கலை படிப்புகள் குறித்தும், அதில் எப்படி சேரலாம் என்பது குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Govt Art and Culture : பொறியியல், மருத்துவம், வணிகம், அறிவியல் படிப்புகளுக்கு இணையான கட்டிடக்கலை படிப்புகள் குறித்தும், அதில் எப்படி சேரலாம் என்பது குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Govt Art and Culture : பொறியியல், மருத்துவம், வணிகம், அறிவியல் படிப்புகளுக்கு இணையான கட்டிடக்கலை படிப்புகள் குறித்தும், அதில் எப்படி சேரலாம் என்பது குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மாமல்லபுரம், அரசு கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு கீழ்வரும் விவரப்படி தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை (www.artandculture.tn.gov.in) என்ற இணையதளம் முகவரியில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Result 2024: வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்..தமிழகத்தில் 94.56% பேர் தேர்ச்சி - முழு விபரம் இதோ..!

இளங்கலை பட்டப்படிப்பு (நான்காண்டு காலம்) B.TECH/B.F.A DEGREE

தொழில் நுட்பவியல் இளையர் மரபுக் கட்டிட கலை, (B.Tech Degree in Traditional Architecture), இதற்கு 12ம் வகுப்பு (கணிதத்துடன்) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கவின் கலை இளையர் மரபு சிற்பக் கலை பட்டம் (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம்), (BFA Degree in Traditional Sculpture)

கவின் கலை இளையர் மரபு, ஓவியமும் மற்றும் வண்ணம் பட்டம் (BFA Degree in Traditional Drawing and Painting), இதற்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி (அல்லது) இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டியலினம் 26 வயது நிறைவு செய்யாதவர்கள். இதர பிரிவினர் 23 வயது நிறைவு செய்யாதவர்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50, விண்ணப்பக் கட்டணமாகவும், இதர பிரிவினருக்கு ரூ.100, விண்ணப்பக் கட்டணமாகவும் தொடர்புடைய கல்லூரியின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தவேண்டும். தொகை செலுத்திய சலான் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

மாமல்லபுரம், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்

Account Name : Principal,

Govt. College of Architecture and Sculpture ,

Mamallapuram

Bank : STATE BANK OF INDIA

Account Number : 11263357303

Branch Name : Tirukazhukkundram

IFSC Code SBIN0001191

கூடுதல் விவரங்களுக்கு : முதல்வர்(பொ) அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி - 603 104 என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்.044- 27442261 என்பதிலோ தொடர்புகொள்ள வேண்டும்.

இணையதளத்தில் www.artandculture.tn.gov.in விண்ணப்பம் பதிவு செய்தல், கட்டணச் சலான், சான்றிதழ்கள், ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 30.06.2023

முதல்வர் (பொ),

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, கலை பண்பாட்டுத் துறை, மாமல்லபுரம், இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சென்னை - 600 008 ஆகியோர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்