தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் முதல் சூடான மதுரை வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Tamil Top 10 News: அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல் முதல் சூடான மதுரை வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil

Sep 20, 2024, 08:02 PM IST

google News
Tamil Top 10 News: பிரியாணி கடைகளுக்கு சீல், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு, மதுரையில் அதிகரித்த வெயில் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Tamil Top 10 News: பிரியாணி கடைகளுக்கு சீல், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு, மதுரையில் அதிகரித்த வெயில் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: பிரியாணி கடைகளுக்கு சீல், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு, மதுரையில் அதிகரித்த வெயில் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Evening Tamil Top 10 News: தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளையும் டாப் 10 செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்

எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையின் கொடுங்கையூர் சிட்கோ நகர் கிளையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து, கடைக்கு சென்று ஆய்வு நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு

திருப்பதி கோயில் பிரசாத லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜூன் மற்றும் ஜூலையில் ஏ.ஆர். டெய்ரியில் இருந்து திருப்பதி கோயிலுக்கு அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்த நிலையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

சிறுமிக்கு சில்மிஷம் அளித்த பிரியாணி கடை ஊழியர்கள்

சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள பிரபல அப்பு பிரியாணி கடை, தரமற்ற உணவு தயாரித்த விவகாரத்தில் நேற்று சீல் வைக்கப்பட்ட நிலையில், 15 வயது சிறுமிக்கு சில்மிஷம் அளித்த புகாரில் அக்கடையின் ஊழியர்கள் இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முன்தினம் பிரியாணி வாங்க வந்த சிறுமியிடம் கடையில் வேலை செய்யும் மதன் என்பவர் தொல்லை செய்ய, அச்சிறுமி தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். சிறுமியின் சித்தப்பா கடைக்கு வந்து இதுகுறித்து கேட்க, கடையின் மேலாளர் கிஷோர் மற்றும் மதன் இருவரும் இணைந்து அவரை தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் கிஷோர், மதன் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி

ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள், வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை தெரிவித்துள்ளது. கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி. ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கிலோ எடை கொண்ட 2 துண்டுகள் மட்டும் ஒப்பந்த ஊழியரால் திருடப்பட்டது; பிறகு மீட்கப்பட்டது. வழக்கு விசாரணையை டிச.2ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 4 பேருக்கு பாதிப்பு

கடலூரில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடலூர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைலாஷ் குமார் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்தனர். உணவகத்தின் சமையல் கூடத்தில் இருந்து காலாவதியான மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெண்ணை கொலை செய்த போலி சாமியார்

திருவண்ணாமலையில் பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற போலி சாமியார் கைது; திருவண்ணாமலையில் உயிர்போக வேண்டும் என பெண்மணி விரும்பியதால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த அலமேலு (50), திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஏரியில் சடலமாக மீட்பு: திருவண்ணாமலையில் கூட்டம் அதிகம் இருந்ததால் அருகில் உள்ள கொளத்தூருக்கு அழைத்துச்சென்று கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்றதாக போலி சாமியார் தட்சன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அக்டோபர் 3ம் தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சூடான மதுரை

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. நாகை, தஞ்சாவூர், பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், திருச்சி, ஈரோடு, கரூர், பரங்கிப்பேட்டை, சென்னையில் 101 டிகிரியும், கடலூர், புதுச்சேரியில் 100 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி