TNPSC Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை!-tnpsc chairman jawahirullah mla alleges tnpsc chairman prabhakar ias has bjp links - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை!

TNPSC Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை!

Kathiravan V HT Tamil
Aug 14, 2024 06:19 PM IST

TNPSC Chairman: தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

TNPSC Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ என திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்து உள்ளார்.
TNPSC Chairman: ’சங்கி சகவாசம் உள்ளவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியா?’ என திமுக அரசு மீது ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸை தமிழ்நாடு அரசு நேற்று நியமனம் செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

யார் இந்த பிரபாகர் ஐ.ஏ.எஸ்?

1989ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்த பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். காலஞ்சென்ற திமுக தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, அவரது செயலாளராக இருந்தவர் பிரபாகர்.

உள்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், வணிக வரித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு பொறுப்புகளை அவர் வகித்து உள்ளார்.

2022 முதல் புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை

முன்னதாக டி.என்.பி.எஸ்.சி தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கடந்த 2020ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது பொறுப்பு டிஎன்பிஎஸ்சி தலைவராக முனைவர். ச. முனியநாதன் கடந்த 10.06.2022 முதல் இருந்து வருகிறார்.

சைலேந்திரபாபு நியமனம்! திருப்பி அனுப்பிய ஆளுநர்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை அனுப்பியது. இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருந்தார்.

சைலேந்திர பாபு நியமனம் குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்வி!

இப்பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும், ஆனால், சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது. எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டு இருந்தார். மேலும் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் குறித்து ஜவாஹிருல்லா விமர்சனம் 

இந்த நிலையில் பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா விமர்சனம் செய்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள இடுகையில், ”பாஐக மாநிலத் தலைவருடன் உறவாடியவரும் உள்துறை செயலாளராக இருந்தபோது செயல்திறன் இன்மையினால் மாற்றப்பட்டருமான சங்கித் தொடர்புள்ளவருக்கு சமூக நீதியை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பை ஐந்தாண்டுகளுக்கு வழங்குவது வேதனைக்குரியது” என கூறி உள்ளார். 

திமுக அரசு மேற்கொண்டுள்ள நியமனத்தை கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி விமர்சனம் செய்து உள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.