PM Modi Meditation: இறுதிகட்ட தேர்தல்! கன்னியாகுமரி வரும் மோடி! இரவு பகலாக தியானம் செய்ய திட்டம்!
May 28, 2024, 05:08 PM IST
திருவள்ளுர்வர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
வரும் மே 30ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7ஆம் கட்ட தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 24 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளார்.
இது அரசியல் நிகழ்வு அல்ல
தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்ட முடிவுக்கு பிறகு கன்னியாகுமரிக்கு அவர் செல்வது ஆன்மிக பயணமாக இருக்கும் என்பதால் அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.
திருவள்ளுவர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.
பிரதமரின் திட்டம் என்ன?
தேர்தல் பரப்புரை நிறைவடையும் மே 30 ஆம் தேதி மாலையில் தியானத்தை தொடங்கும் மோடி ஜூன் 1 ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை தமிழ்நாட்டில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டுக்கு அரசு முறையாகவும், தேர்தல் பரப்புரைக்காகவும் பிரதமர் மோடி ஏழுக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாடு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன தெரியுமா?
கன்னியாகுமரியில்தான் சுவாமி விவேகானந்தர் கண்ட பாரத மாதா கனவு அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கௌதம புத்தருக்கு சாரநாத்தை ஒத்த இந்த பாறை, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பலர் நம்புகிறார்கள்.
இப்போது தியான மண்டபம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் மட்டுமின்றி, இந்து புராணங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமானுக்காக காத்திருந்தபோது பார்வதி தேவி இந்த இடத்தில் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது.
கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு முனையைக் குறிக்கிறது மற்றும் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை சந்திக்கும் இடமாக செயல்படுகிறது.
கூடுதலாக, இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவை சங்கமிக்கும் இடம் இது, இது ஒரு தனித்துவமான புவியியல் இடமாக அமைகிறது.
தேர்தல் பிரசாரங்களை முடித்துவிட்டு, பிரதமர் அடிக்கடி ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார். 2019 ஆம் ஆண்டில், அவர் கேதார்நாத்திற்கு விஜயம் செய்தார், 2014 ஆம் ஆண்டில், அவர் சிவாஜியின் பிரதாப்கருக்கு சென்றார்.