PM Modi : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி.. எதற்கு தெரியுமா?
- Prime Minister Modi : பிரதமர மோடி வரும் 30 ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தரவுள்ளார். 24 மணிநேரம் கடல் நடுவே பாறை மீது அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
- Prime Minister Modi : பிரதமர மோடி வரும் 30 ஆம் தேதி கன்னியாகுமரி வருகை தரவுள்ளார். 24 மணிநேரம் கடல் நடுவே பாறை மீது அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
(1 / 6)
பிரதமர மோடி வரும் 30 ம் தேதி கன்னியாகுமரி வருகை. 24 மணிநேரம் கடல் நடுவே பாறை மீது அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.
(2 / 6)
கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது, ஏழாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன் தினம் கேதர்நாத் சிவன் கோவிலுக்கு சென்றதோடு, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பனிபடந்த பாதையில் நடந்து சென்று கடல்மட்டத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் அடிக்கு மேலுள்ள குகையில் ஒருநாள் முழுவதும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். (BJP)
(3 / 6)
அதன்பின் வெளியே வந்த போது, தமக்கும் கேதர்நாத் க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தான் தியானம் மேற்கொண்டது தனக்காக இல்லை நாட்டு மக்களுக்காக என்று கூறியிருந்தார். அதே போன்று தற்போது 2024 ஆம் மக்களை தேர்தலின் கடைசி வாக்குப்பதிவும் ஏழாவது கட்ட தேர்தல் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி பிற்பகல் கன்னியாகுமரி வரவுள்ளார்,
(4 / 6)
முக்கடல் சங்கமிக்கும் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வுள்ளார். 1 ஆம் தேதி காலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து வெளியே வரும் மோடி, அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று டெல்லி புறப்படவுள்ளார்(ANI)
(5 / 6)
குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் வெற்றிபெற அதிகம் கவனம் செலுத்திவரும் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார செய்ய அதிகமுறை தமிழகம் வந்தார்.மேலும் இந்தாண்டு முதல் அரசு நிகழ்ச்சியும் ஜனவரி 2ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்றது.
மற்ற கேலரிக்கள்