’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Kathiravan V HT Tamil
May 04, 2024 06:30 AM IST

”இளவரசரின் ஆலோசகர் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடப்படும் சாம் பிட்ரோடாவின் பெயர்தான் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை களங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது”

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சாம் பிட்ரோடா (File Photo)
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சாம் பிட்ரோடா (File Photo) (HT_PRINT)

நாடாளுமன்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ”"நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று அரச குடும்பத்தின் இளவரசரின் ஆலோசகர் கூறி உள்ளார். இப்போது, இவர்கள் இதையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுவிட்டார்கள்... பரம்பரை வரி விதிக்கப்படும் என்றும், பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கூறுகிறது” என பிரதமர் மோடி பேசி இருந்தார். 

இதில் இளவரசரின் ஆலோசகர் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடப்படும் சாம் பிட்ரோடாவின் பெயர்தான் பரப்புரை களங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.   

யார் இந்த சாம் பிட்ரோடா?

மகாத்மா காந்தியின் தத்துவதால் ஈர்க்கப்பட்ட குஜராத்தி குடும்பத்தை பூர்வீகமாக கொண்ட சாம் பிட்ரோடா ஒடிசாவில் பிறந்தவர். 

1964ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் மின் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்ற பிட்ரோடா, 1975 ஆம் ஆண்டு எலட்ரானிக் டைரியை கண்டுபிடித்தார். கையடக்க கணினிகளின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராக சாம் பிட்ரோடா கருதப்படுகிறார். 

1984ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியா திரும்பும்படி பிட்ரோடா அழைக்கப்பட்டதால் அமெரிக்க குடியுரிமையை துறந்தார். டெலிமேடிக்ஸ்  சி-டாட்  எனப்படும் தன்னாட்டி அதிகாரம் பெற்ற R&D மையத்தை அவர் தொடங்கினார். 

1987ஆம் ஆண்டில் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசகராக இருந்த போது இந்திய தகவல் தொழில்நுட்ப துறை மேம்பட முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும், டிஜிட்டல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டார். 

இது மட்டும் இன்றி தண்ணீர், எழுத்தறிவு, நோய்த்தடுப்பு, எண்ணெய் வித்துக்கள், தொலைத் தொடர்பு, பால் தொடர்பான தொழில் நுட்ப மேம்பாட்டு பணிகளில் பிரதமரின் ஆலோசகராகவும் சாம் பிட்ரோடா பங்களிப்பை அளித்தார்.

இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் நிறுவனத் தலைவராக இருந்த பிட்ரோடா, 1990களில் மீண்டும் தனது வணிக நலன்களுக்காக அமெரிக்கா திரும்பினார். 1995ஆம் ஆண்டில் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் முதல் தலைவர் ஆனார். 

கடந்த 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த போது, பிரதமர் மன்மோகன் சிங் அரசில் கேபினட் அந்தஸ்து பெற்ற பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். 

சாம் பிட்ரோடா சர்ச்சையும் விளக்கமும்!

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக உள்ள சாம் பிட்ரோடா கடந்த ஏப்ரல் 24 அன்று பரம்பரை வரி குறித்த தனது முந்தைய பேச்சுகள்  உருவாக்கிய எதிர்வினைகள் குறித்து தெளிவு படுத்தினார். “அமெரிக்காவில் அமெரிக்கவில் உள்ள பரம்பரை வரி பற்றி தொலைக்காட்சியில் எனது உரையாடலில் ஒரு உதாரணமாக மட்டுமே குறிப்பிட்டேன். உண்மைகளை சொல்ல வேண்டாமா? இது போன்ற பிரச்சினைகளை மக்கள் விவாதிக்க வேண்டும் என்று நான் கூறினேன். இதற்கும் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். 

55 சதவீதம் பறிக்கப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவில் இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? பாஜகவும் ஊடகங்களும் ஏன் பீதியில் உள்ளன? நாட்டில் சாத்தியமான பரம்பரை வரிச் சட்டத்தை விவாதிப்பது குறித்து பிட்ரோடாவின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளன

முன்னதாக, செல்வ மறுபகிர்வு குறித்த கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிட்ரோடா, அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள பரம்பரை வரி என்ற கருத்தாக்கம் குறித்து பேசினார், மேலும் இவை வெளியிடப்படுகின்றன, அவை விவாதிக்கப்பட வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறி இருந்தார். 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.