தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Morning Top 10 News On 5 January 2024

Top 10 News: 21 மாவட்டங்களில் மழை.. திருவள்ளுவர் சிலை திறப்பு உள்ளிட்ட செய்திகள் !

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 05, 2024 07:41 AM IST

Morning Top 10 News: “தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு தொடர்பான இன்றைய டாப் 10 முக்கியச் செய்திகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்”

கோவையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை
கோவையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை

ட்ரெண்டிங் செய்திகள்

•கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிகுளம் ஏரி கரை அருகே 25 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

•தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதியை வழங்குவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்நிலையில் ஒரு ரூபாய் வரி அளித்தால் 40 காசுகளை மீண்டும் திருப்பித் தருவதாக பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சனம் விமர்சனம் செய்துள்ளனர்.

•தமிழ்நாடு அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க நேரம் கோரி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

•கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாகி உள்ளது என டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

•மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் முதலமைச்சர் சிறப்பு சிறு வணிக கடன் முகாம் இன்று தொடங்கப்பட உள்ளது குறைந்த வட்டியில் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

•லட்சத்தீவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். இந்நிலையில் மணிப்பூர் பற்றி எரிகையில் பிரதமர் லட்சத்தீவில் உல்லாசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது

•சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 594 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (ஜன.05) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

•முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இன்று மோத உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நவி மும்மையில் இன்று தொடங்குகிறது.

•நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்