தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vote Share: திமுக, அதிமுகவுக்கு அடுத்த 3வது இடத்தில் பாஜக! 11.24 சதவீத வாக்குகளை பெற்று அபாரம்! அங்கீகாரம் பெரும் நாதக!

Vote share: திமுக, அதிமுகவுக்கு அடுத்த 3வது இடத்தில் பாஜக! 11.24 சதவீத வாக்குகளை பெற்று அபாரம்! அங்கீகாரம் பெரும் நாதக!

Kathiravan V HT Tamil

Jun 05, 2024, 12:51 PM IST

google News
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு 46.97 %, அதிமுக கூட்டணிக்கு, 23.05 %, பாஜக கூட்டணிக்கு 18.28 %, நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, மற்றவைக்கு 2.66 %, நோட்டாவுக்கு 1.07 % வாக்குகள் கிடைத்து உள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு 46.97 %, அதிமுக கூட்டணிக்கு, 23.05 %, பாஜக கூட்டணிக்கு 18.28 %, நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, மற்றவைக்கு 2.66 %, நோட்டாவுக்கு 1.07 % வாக்குகள் கிடைத்து உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு 46.97 %, அதிமுக கூட்டணிக்கு, 23.05 %, பாஜக கூட்டணிக்கு 18.28 %, நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, மற்றவைக்கு 2.66 %, நோட்டாவுக்கு 1.07 % வாக்குகள் கிடைத்து உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்து உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.

தேசிய அளவில் கட்சிகள் பெற்ற இடங்கள் 

240 தொகுதிகளில் வென்று பாஜக தனி பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், திமுக 22 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 12 இடங்களிலும், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 7 இடங்களிலும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி 4 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாதள் கட்சி 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 4 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களிலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி 3 இடங்களிலும், ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், சிபிஐ.எல்.எல் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும், சிபிஐ கட்சி 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தள் கட்சி 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இணைந்து 18 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டணி விவரம் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள்  போட்டியிட்டன. 

பாஜக கூட்டணியை  பொறுத்தவரை பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஓபிஎஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமுமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

கூட்டணி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் 

திமுக கூட்டணிக்கு 46.97 %, அதிமுக கூட்டணிக்கு, 23.05 %, பாஜக கூட்டணிக்கு 18.28 %, நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, மற்றவைக்கு 2.66 %, நோட்டாவுக்கு 1.07 % வாக்குகள் கிடைத்து உள்ளன.

கட்சிவாரியாக பதிவான வாக்கு சதவீதம் 

கட்சி வாரியாக, திமுகவுக்கு 26.93%, அதிமுகவுக்கு 20.46%, பாஜகவுக்கு 11.24%, காங்கிரஸ் கட்சிக்கு 10.67%, நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, தேமுதிகவுக்கு 2.59%மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.52%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10.67%, ஐ.யு.எம்.எல் - 1.17% வாக்குகள் பதிவாகி உள்ளன.

திமுக, அதிமுகவுக்கு அடுத்து வாக்கு சதவீதம் அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து உள்ளது. 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை