PM Narendra Modi seeks to form government: 'ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு'
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Narendra Modi Seeks To Form Government: 'ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு'

PM Narendra Modi seeks to form government: 'ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு'

Manigandan K T HT Tamil
Jun 05, 2024 12:08 PM IST

17வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவையை கலைத்த பின்னர் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர திட்டமிட்டு வருகிறது.

PM Narendra Modi seeks to form government: ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு. (PTI Photo/Ravi Choudhary)
PM Narendra Modi seeks to form government: ஜனாதிபதியை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர பாஜக முடிவு. (PTI Photo/Ravi Choudhary) (PTI)

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

17வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவையை கலைத்த பின்னர் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர திட்டமிட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இண்டியா கூட்டணி 233 இடங்களைக் கைப்பற்றியது.

லோக்சபா தேர்தல் 2024

18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது.

ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. சிக்கிமில் அந்த மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பலம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) (அஜித் பவார்), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அதிமுக (ஓபிஎஸ்), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி மற்றும் பிற முக்கிய கட்சிகள் உள்ளன. மேலும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அப்னாடல் (சோனேலால்), ராஷ்ட்ரிய லோக் தளம், நிஷாத் கட்சி, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, ஹரியானா லோகித் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி, சிரோமணி அகாலி தளம் சம்யுக்தா, பாரத் தர்ம ஜன சேனா, கேரள காமராஜ் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி (Athawale of India) , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா, பிரஹர் ஜனசக்தி கட்சி, ஜன சுராஜ்ய சக்தி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, கோர்கா தேசிய விடுதலை முன்னணி போன்றவை உள்ளன.

I.N.D.I.A கூட்டணியின் பலம்

காங்கிரசை பிரதான கட்சியாக கொண்டு ‘இந்தியா’ கூட்டணி புதிதாக உருவானது. அதன் முழுப் பெயர் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா). மல்லிகார்ஜுன கார்கே தலைவராக உள்ளார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), கேரள காங்கிரஸ் (எம்), தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பிற கட்சிகள் உள்ளன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.