Vilavancode By Election Results: சத்தமில்லாமல் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட்!
Vilavancode By Election Results: கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 04) காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை 4 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகளை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
விளவங்கோடு இடைத்தேர்தல்
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
காங்கிரஸ் வெற்றி?
இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் 47,232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வி.எஸ். நந்தினி 23,663 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். வி.எஸ்.நந்தினியை விட தாரகை கத்பட் 23,569 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் விளங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.
விளவங்கோடு வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தாரகை கத்பட் (காங்கிரஸ்) - 47332
நந்தினி (பாஜக) - 23663
ராணி (அதிமுக) - 2689
ஜேமினி (நாம் தமிழர் கட்சி) - 3990
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்