தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர்-போலீசில் சிக்கியது எப்படி?

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர்-போலீசில் சிக்கியது எப்படி?

Divya Sekar HT Tamil

Apr 01, 2023, 09:57 AM IST

போளூர் அருகே ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்ற பெண் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
போளூர் அருகே ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்ற பெண் தலைவரை போலீசார் கைது செய்தனர்.

போளூர் அருகே ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்ற பெண் தலைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை : போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பராசக்தி (42), இவரது கணவர் கோவிந்தசாமி. இவர் எடப்பிறை ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த  வருடம் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’மழையில் நனைய ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!’

Ramadoss: 'தொடர்கதையாகவே நீடிக்கும் மின்வெட்டு'..தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? - ராமதாஸ் வலியுறுத்தல்!

Nellai Congress Leader: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம்..மாவட்ட எஸ்பி மறுப்பு!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 11

இதனைத்தொடர்ந்து பராசக்தி ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஜீவாவிடம் சென்று என் கணவருக்கு 4 மாதமாக சம்பளம் வரவில்லை. மேலும் அவர் செய்து வந்த பணியைளார். எனக்கு கருணை அடிப்படையில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, உனக்கு டேங்க் ஆபரேட்டர் வேலை தர வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். எனக்கு ஏற்கனவே 4 மகள்கள் உள்ளனர். 

மேலும் நான் வறுமையில் வாடுகிறேன் என்று பராசக்தி கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஊராட்சி தலைவர் ஜீவா, வேண்டு மென்றால் ரூ.50 ஆயிரத்தை குறைத்துக் கொண்டு 4.5 லட்சத்தை கொடுங்கள். மேலும் முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டும் உங்களுக்கு வேலை. இல்லை என்றால் வேறு ஒருவருக்கு வேலையை வழங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பராசக்தியும், அவரது அண்ணன் ராஜனும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பராசக்தியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர். 

பின்னர் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார். அப் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்