Top 10 News: பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் முதல் மோடியின் சேலம் பொதுக்கூட்டம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ் இதோ!
Mar 19, 2024, 09:02 AM IST
”Morning Top 10 News: பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் முதல் பிரதமர் நரேந்திர மோடியின் சேலம் பொதுக்கூட்டம் வரை இன்றைய டாப் 10 செய்திகள் குறித்த விவரங்கள்”
”Morning Top 10 News: பாஜக-பாமக கூட்டணி ஒப்பந்தம் முதல் பிரதமர் நரேந்திர மோடியின் சேலம் பொதுக்கூட்டம் வரை இன்றைய டாப் 10 செய்திகள் குறித்த விவரங்கள்”
- மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளது. தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
- மக்களவை தேர்தலையொட்டி கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகன பேரணி நடத்தினார். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என பிரதமர் மோடி சமூகவலைத்தள பதிவு.
- சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், பாரிவேந்தர், ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர் பங்கேற்பார்கள் என தகவல்.
- மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் இன்றும் நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நடைபெறுகிறது.
- திமுக கூட்டணியில் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் மதிமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் முடிவு. தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ தரவில்லை எனவும், மக்கள் பணி செய்ய இதை ஒரு வாய்ப்பாக கருதுவதாகவும் துரை வைகோ பேட்டி.
- திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதியான நாகப்பட்டினத்தில் செல்வராஜும், திருப்பூரில் சுப்பராயன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி அறிவிப்பு.
- திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அக்கட்சி சார்பில் சூர்ய மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிப்பு.
- அடுத்த மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வரும் மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்குகிறார். மார்ச் 24அம் தேதி அன்று திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது பரப்புரையை தொடங்குகிறார்.
- அதிமுகவின் கட்சி பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்துவது தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ள உத்தரவுகளுக்கு எதிரானது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்’ என கோரி இருந்த நிலையில் அதிமுக கட்சி, சின்னம், பெயரை பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- அதிமுக பொதுக்குழு தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக கட்சி சார்பில் கட்சியின் ஏ ஃபார்ம் பி ஃபார்ம்களில் கையெழுத்திடவும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு தனிச் சின்னத்தை ஒதுக்கி தரவும் கோரி தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.
டாபிக்ஸ்