தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கவரைப்பேட்டை ரயில் விபத்து .. இன்று ரத்து செய்யப்பட்ட மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள் விவரம் இதோ!

கவரைப்பேட்டை ரயில் விபத்து .. இன்று ரத்து செய்யப்பட்ட மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள் விவரம் இதோ!

Divya Sekar HT Tamil

Oct 12, 2024, 06:52 AM IST

google News
Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Kavaraipettai Train Accident : கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல இன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எஸ்பிரஸ் ரயில் (12578) சரக்கு ரயில் மீது மோதி நேற்று பயங்கர விபத்து ஏற்பட்டது. பெரம்பூரில் இருந்து நேற்று இரவு  7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 3 பெட்டிகள் எரிந்து தேசம் ஆனது.

12-13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன

வண்டி எண் 12578 பொன்னேரியை இரவு 9.27 மணிக்கு கடந்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பயணிகள் பயங்கர சத்தத்துடன் கூடிய மோதலை அனுபவித்தனர். மேலும் ரயில் லூப் லைனில் நுழைந்து சரக்கு ரயிலுடன் மோதியது.இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, காயம் அடைந்த 19 பேர் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

குறைந்தது 12 முதல் 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக தென்மேற்கு ரயில்வே சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது. இந்த மோதலின் போது ரயிலில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தீயணைப்பு படையினர் அணைத்தனர். மொத்தம் 12-13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக இரண்டு இருப்புபாதை மார்க்கத்திலும் ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்

கன்னியாகுமரி - நிசாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் - 12641.

சென்னை சென்ட்ரல் - லக்னோ சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் - 16093. 

சென்னை சென்ட்ரல் - நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் - 12611

ஹவுராவுக்கு புறப்பட்ட சென்னை சென்ட்ரல் மெயில் - 12839

 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - 12655

 பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் - 22644

புது டெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் - 12616

காக்கிநாடா துறைமுகம் - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் - 17644 

இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் - 16111

புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் 16112

சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் - 16203, 16053, 16057, 

திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் - 16204, 16054, 16058, 

அரக்கோணம் - புதுச்சேரி மெமு ரயில்

கடப்பா - அரக்கோணம் மெமு ரயில்

சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு, திருப்பதி - சென்னை சென்ட்ரல் மெமு ரயில்

அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில்

திருப்பதி - அரக்கோணம் மெமு ரயில்

விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில், 

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை - நெல்லூர் மெமு எக்ஸ்பிரஸ்

நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை