ஆட்டம் போடும் ஆபிஸ்.. இது வேட்டையன் விடுமுறை.. ரஜினிக்காக சம்பவம் செய்த புதுச்சேரி நிறுவனம்.. இனி மஜா தான்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆட்டம் போடும் ஆபிஸ்.. இது வேட்டையன் விடுமுறை.. ரஜினிக்காக சம்பவம் செய்த புதுச்சேரி நிறுவனம்.. இனி மஜா தான்..

ஆட்டம் போடும் ஆபிஸ்.. இது வேட்டையன் விடுமுறை.. ரஜினிக்காக சம்பவம் செய்த புதுச்சேரி நிறுவனம்.. இனி மஜா தான்..

Malavica Natarajan HT Tamil
Oct 09, 2024 10:44 AM IST

புதுச்சேரியில் உள்ள நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு வேட்டையன் பட டிக்கெட் புக் செய்து கொடுத்து, அவர்கள் படம் பார்த்து வர ஏதுவாக விடுமுறையும் அளித்து பேமஸ் ஆகியுள்ளது.

ஆட்டம் போடும் ஆபிஸ்.. இது வேட்டையன் விடுமுறை.. ரஜினிக்காக சம்பவம் செய்த புதுச்சேரி நிறுவனம்.. இனி மஜா தான்..
ஆட்டம் போடும் ஆபிஸ்.. இது வேட்டையன் விடுமுறை.. ரஜினிக்காக சம்பவம் செய்த புதுச்சேரி நிறுவனம்.. இனி மஜா தான்..

வேட்டையில் இறங்கிய வேட்டையன்

வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் முதல் நாளிற்கான பெரும்பான்மையான டிக்கெட் புக் ஆகியுள்ளது. மேலும் பல ஊர்ப்பகுதிகளிலும் டிக்கெட்கள் விற்பனை ஆக தொடங்கியுள்ளன.

மேலும் இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகி விடும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினியின் சம்பளம்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. மேலும் இப்படத்திற்காக ரஜினி 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிக்கு அடுத்ததாக அமிதாப் பச்சனுக்கு 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பின் ராணா டகுபதி, பகத் பாசில் ஆகிய இருவருக்கும் 2 கோடி ரூபாயும், மஞ்சு வாரியருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாஸ் காட்டிய கம்பெனி

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள வாஸ்கோ எனும் நிறுவனம் நாளை அதன் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கி உள்ளது. காரணம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரீலிஸ் என்பதால். நாளை அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதை கொண்டாடும் விதமாக இந்த கம்பெனி தங்கள் அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை விட்டது. அதுமட்டுமின்றி, அன்றைய தினம் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வேட்டையன் பட டிக்கெட்டையும் புக் செய்து கொடுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வேலை கிடைத்தால் இப்படி ஒரு கம்பெனியில் கிடைக்க வேண்டும். அப்படி கிடைப்பதெல்லாம் ஒரு வரம் என பேசி வருகின்றனர்.

அடுத்தடுத்த அப்டேட் கொடுக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் சிகிச்சைக்கு பின் நலம் பெற்று வீடு திரும்பினார். இவரது உடல் நலக் குறைவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலி படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த மாதம் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது வெளியாகி உள்ள மணிரத்னம் உடன் இணையும் செய்தி என ரஜினி அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கூலி படத்திற்கு பின் ரஜினிகாந்த் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி படத்திற்கு பின் இவர்கள் இருவரும் கூட்டணி இதுதான். மேலும் இப்படத்திற்கான அறிவிப்பு ராஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Whats_app_banner