Kallakurichi Liquor Death : தொடரும் சோகம்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 54 ஆக அதிகரிப்பு.. முழு விவரம் இதோ!
Jun 22, 2024, 07:37 AM IST
Kallakurichi Liquor Death : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 54 ஆக அதிகரித்துள்ளது.அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்டஉடல் உபாதைகள் ஏற்பட்டன. இரு தினங்களுக்கு முன்பு ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 54 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்தவர்களில் சேலம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்
சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மேலும் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 47 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 48 ஆவது நபராக மாரிமுத்து என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 31 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம்
சேலம்
சிகிச்சை - 31
இறப்பு : 17
கள்ளக்குறிச்சி
சிகிச்சை = 82
இறப்பு : 30
ஜிப்மர்
சிகிச்சை - 17
இறப்பு : 3
விழுப்புரம்
சிகிச்சை : 2
இறப்பு : 4
இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்தம் : 186
இதில் உயிரிழந்தவர்கள் மொத்தம் : 54
தற்போது சிகிக்சைசையில் உள்ளவர்கள் : 132
கைது செய்யப்பட்டவர்கள் விவரம்
இந்தச் சம்பவம் தொடர்பாக, கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி என்பவர் காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமோதரன், மதன், விஜயா (க/பெ. கோவிந்தராஜ்) ஆகிய 3 நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி பணியிட மாற்றம்
மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.செந்தில்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்தவும் சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்